ரத்­தீ­ஷுடன் தொடர்­பில் இருந்த நடிகர், நடி­கைகள், ஐபி­எஸ்கள் யார் யார்?… பட்­டி­ய­லிட்டு விசா­ர­ணைக்கு ஆஜ­ராக சம்மன் அனுப்ப தயா­ராகும் அமலாக்­கத்­து­றை

ரத்­தீ­ஷுடன் தொடர்­பில் இருந்த நடிகர், நடி­கைகள், ஐபி­எஸ்கள் யார் யார்?… என பட்­டி­ய­லிட்டு விசா­ர­ணைக்கு ஆஜ­ராக சம்மன் அனுப்ப அமலாக்­கத்­து­றை தயா­ரா­கி­­யுள்­ள­தாக தக­வல்கள் வெளியா­கி­யுள்­ள­ன.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED) விசாரணையில் கண்­டு­ ­பிடித்­துள்­ளனர். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், அதற்கான முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும், QR குறியீடு மற்றும் Google Pay போன்ற வசதிகள் இருந்தாலும், அங்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்தன.

டாஸ்மாக் நிறு­வ­னத்தின் இயக்­குநர் ஐஏஎஸ் அதி­காரி விசாகன் வீட்டில் நடந்த ரெய்­­டுக்குப் பிற­கு முக்­கிய ஆவணங்கள் அம­லாக்­கத்து­றையின் கைகளில் சிக்­கி­ய­துதான் இந்த ரெய்டின் பெரிய திருப்­பு­மு­னை­யாக அமைந்து விட்­டதாக கூறப்­ப­டு­கி­றது. விசாகன் என்ன வாக்­கு­மூலம் கொடுத்­தாரோ தெரி­ய­வில்லை, அதன் பிறகு அம­லாக்­கத்து­றையின் அடுத்த ரெய்டு அணி­வ­குப்பு உத­ய­நி­தியின் நெருங்­கிய கல்­லூரி நண்­பரும், தொழில் பார்ட்­ன­ரு­மான ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரத்­தீஷ் வீட்­டுக்கு திரும்­பி­யது. அங்கு அம­லாக்­கத்­துறை சென்ற போது ரத்­தீஷ் இல்லை. வீடு பூட்­டப்­பட்­டி­ருந்­தது. சீல் வைத்து விட்டு திரும்­பி­யுள்­ளனர் அமலாக்­கப்­பி­ரிவு அதி­கா­ரிகள்.

ரத்­தீஷை பிடித்தால் அனைத்து ஊழல்களுக்கும் உரிய அனைத்து ஆதா­ரங்­களும் சிக்கி விடும் என்ற நம்­பிக்­கையில் அங்கு சென்ற போது வீடு பூட்­­டப்­பட்­டி­ருந்­தது ED க்குபெரும் ஏமாற்­றத்தை அளித்­தது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழலின் முக்­கியப் புள்­ளி­யாக சந்தேகிக்கப்படும் தொழிலதிபர் ரத்தீஷ், அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு முன்னரே அவர் லண்டன் தப்பிச் சென்று விட்­ட­­தா­கவும், அவ­ருடன் அவ­ரது நெருங்­கிய நண்­பர் டான் பிக்சர்ஸ் உரி­மை­யா­ள­­ரு­மா­ன ஆகாஷ் பாஸ்­க­ர­னும் சேர்ந்து தலை­­ம­றை­வாகி விட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
ரத்­தீஷை பிடிக்க அமலாக்கத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில் ரத்­தீஷ் பற்­றிய முழு விவ­ரங்­களை அம­லாக்­கத்துறை தற்­போது தோண்டித் துருவ தொடங்­கி­யுள்­ள­து.
ரத்தீசுக்கு சினிமா துறையில் ஏரா­ள­மான தொடர்­புகள் உள்­ள­­தா­கவும், அதி­கா­ரி­க­ளுக்கு பலான ஆசை காட்டி சாதித்துக் கொள்வார் எனவும், அதற்­கேற்றாற் போல மது, மாது, போதை என ரத்தீஷின் பகட்டான வாழ்க்கை மற்றும் விருந்து கலாச்சாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்­சியை கிளப்­பி­யுள்­ளன.

சென்னை, பட்டி­னப்­பாக்கம், எம்­ஆர்சி நகரில் உள்ள ரத்­தீஷின் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு வீட்டில் வாரந்­தோறும் நடி­கைகள் கலந்து கொள்ளும் போதை விருந்து நடந்து வந்­­த­தையும் அம­லாக்­கத்துறை அதி­காரிகள் உறுதி செய்­துள்­ளனர். அந்த விருந்தில் தற்­போது தமிழ்­நாட்டின் டிராகன் பட நடிகை, சூப்பர் நடிகை மற்றும் ஐபிஎஸ் அதி­காரி ஒரு­வரும் வாரந்­தோறும் வந்து கல­ந்து கொண்டு சென்றதும் தெரி­ய­வந்­துள்­ளதாம்.

அமலாக்கத்துறை சோதனைக்கு முந்தைய நாள் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் ரத்தீஷ் கலந்து கொண்டதையும் சிசி­டிவிக்கள் மூலம் அம­லாக்­கத்துறை அதி­கா­ரிகள் சேக­ரித்­துள்­ளார்­களாம். அரை குறை ஆடை அணிந்த ஒரு பெண் தனது காரில் இருந்து வந்து இறங்கி ரத்­தீஷ் தங்­கி­யுள்ள CEEBROS அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­புக்குள் செல்லும் போன்ற சிசிடிவி காட்சிகளை அம­லாக்­கத்­துறையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

ரத்தீஷ் வீட்டில் நடந்த மது விருந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், ரஷ்ய மாடல் அழகிகள், போதைப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நடி­கைக்கும் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கைப்பைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டதாகவும் தக­வல்கள் வைர­லா­கின்­ற­ன.

இந்த வகையில் ரத்­தீ­­ஷுடன் நெருங்­கிய கூட்­டாளி­க­ளாக சூப்பர் நடிகையும், அவ­ரது இயக்­குநர் கணவர் மற்றும் ஐபி­எஸ் அதி­காரி, தலை­ந­கரில் பணி­பு­ரியும் உயர் காவல்­துறை அதி­காரி ஒரு­வர் என ஒரு நீண்ட பட்­டி­யலை சம்மன் அனுப்­பு­வ­தற்­காக அம­லாக்­கத்­துறை தயா­ராக வைத்­துள்­ளார்­களாம்.

பட்டி­யலில் உள்ள ஐபி­எஸ் அதி­கா­ரிகள் ரத்­தீ­ஷுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் கோடி­களை அள்­ளி­ய­தா­கவும் தகவல்கள் வெளியா­கி­யுள்­ளதாம். மேலும் சூப்பர் நடி­­கையும், ரத்­தீஷும் டாஸ்மாக் ஊழல் மூலம் வந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்து உரையாடல்கள் நடத்தியதாகவும், இதற்கு ஆதாரமாக அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதையும் அம­லாக்­கப்­பி­ரிவி­னர் விச­ரித்து வரு­கின்­றார்­க­ளாம்.

இதனால் நடிகைக்கும், அவர் கண­வ­ருக்­கும் சம்மன் அனுப்பி விசா­ரணை நடத்த அம­லாக்­கப்­­பி­ரிவு முடிவு செய்­துள்­ள­தாம். ரத்தீஷ் தலை­­ம­றை­வாகி விட்­டதால் எங்கே தாங்­களும் சிக்கிக் கொள்­வோமோ என்ற பயத்தில் அந்த நடிகையும் அவர் கணவரும் கொஞ்ச நாளைக்கு சென்னை பக்கம் வராமல் மறை­வாகவே இருந்து கொள்­ளலாம் என்ற முடிவில் வெளி நாட்­டி­லேயே தஞ்சம் அடைந்து விட்­டார்­க­ளாம்.

– குட்டிப்­பு­லி

Comments (0)
Add Comment