தாம்­பரம் காவல் ஆணை­யரகம் நடத்­திய ரெய்­டு: 101 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலி­பர்கள் கைது

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்­து ஒடி­­சாவைச் சேர்ந்த இரு­வரை கைது செய்­த­னர்.சென்னை தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம். பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ­சா­ருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் இன்று 03.09.2025 காலை 8 மணி­ய­ளவில் னர் தீவி­ர­மாக கண்­கா­ணித்­தனர். பெரும்பாக்கம், அரசங்கழனி ஏரிக்கரை அருகில் வாகன சோதனை நடத்­தி­யதில் அங்கு 101 கிலோ கஞ்­சா­வுடன் ஒடி­சாவைச் சேர்ந்த ஜெய் காரா (34), கமல் லைசன் கிலா (24) ஆகியோர் பிடி­பட்­டனர். அவர்­க­ளிடம் இருந்து 2 செல்­போன்கள் பறி­முதல் செய்­யப்­பட்­டன. இந்­த கஞ்சாவை இரு­­வரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து பெரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு சில்லரை விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரி­ய­வந்­த­து. கைதான இரு­வரும் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­ட­னர்.

Comments (0)
Add Comment