தடுத்த எஸ்.எஸ்.ஐ. உயிர் பறிபோனது! குற்றவாளிக்கு துப்பாக்கி குண்டு பரிசு!!!

குடிபோதையில் அரிவாளால் தாக்கிக்கொண்ட தந்தை, மகான்களின் சண்டையை தடுக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களது வெறிச்செயலுக்கு சிக்கிய ஜீப் ஓட்டுநர் தப்பி ஓடியதால் லேசான காயங்களுடன் தப்பினார். சீருடையுடன் சென்ற உதவி ஆய்வாளரையே வெட்டி கொலை செய்தது காவல்துறையினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி தனது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் மற்றும் குடும்பத்துடன் தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு 3 பெரும் மூக்குமுட்ட குடித்துவிட்டு ஒருவரை ஒருவர் குடிபோதையில் சண்டையிட்டு தாங்கிக்கொள்ள தொடங்கினர். ஒருகட்டத்தில் மூவரும் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து தாங்கிக்கொள்ள முயற்சித்தனர். இவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். குடிபோதையில் 3 பெரும் அரிவாளால் தாக்கி கொள்வதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், ஜீப் ஓட்டுநர் அழகுராஜா இருவரையும் சென்று பார்க்கும்படி காவல் நிலையத்திலிருந்து தகவல் கொடுத்தனர்.

எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலும் , ஓட்டுநர் அழகுராஜாவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது தந்தையும், மகன்களும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கி கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மூவரையும் சண்டைபோடுவதை நிறுத்தும்படி சத்தம்போட்டு தடுத்தனர். தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்த மூர்த்தியும், மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் சண்டையை நிறுத்திவிட்டு, நாங்கள் சண்டை போடுவதை நீங்கள் எப்படி தடுக்கலாம் என கூறியபடி சீருடையில் வந்த எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலையும், காவலர் அழகுராஜாவையும் தாக்க தொடங்கினர். ஒருகட்டத்தில் இருவரையும் அரிவாளால் வெட்ட தொடங்கியதால் பயந்துபோன இருவரும் தப்பி ஓட முயற்சினார். குடிபோதையில் இருந்த 3 பேரும் எஸ்.எஸ்.ஐ. ஷண்முகவேலை சூழ்ந்துகொண்டு சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே கழுத்து துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். காவலர் அழகுராஜாவையும் வெட்ட முயற்சித்தபோது உயிர் பிழைத்தால் பொது என வேகமாக ஓடிவிட்டதால் உயிர் பிழைத்தார்.

தங்கள் மீதான கொலைவெறி தாக்குதல் குறித்து தப்பி ஓடிய அழகுராஜா உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இவரை வெட்டி கொலை செய்த தந்தை மூர்த்தியும், மகன்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் காட்டு தீயாய் பரவி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்க சம்பவ இடத்தில் குவிந்து விட்டனர். உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ. ஷண்முகவேளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி. யாதவ கிரீஷ் அசோக் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகளான மூர்த்தி, தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோரை பிடிக்க உடுமலை சரக டிஎஸ்பி நமசிவாயம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நோய்களான ஹண்டர், டெவில் வரவழைக்கப்பட்டது.

எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தனிப்படை போலீசார் கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிய 3 போரையும் தேடி வந்தனர். இவர்களில் மூர்த்தியின் மகன் தங்கபாண்டி போலீசாரிடம் சிக்கினார். தப்பி ஓடிய மூர்த்தி, மணிகண்டன் இருவரையும் தனிப்படை போலீசார் விடிய, விடிய தேடினர். இதில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உடுமலை குடிமங்கலம் சிக்கனூர் பகுதியின் அருகே உப்பாறு ஓடை பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் மணிகண்டனை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீசார் கேட்டபோது ஓடைப்பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக மணிகண்டன் கூறினார். புதர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை மணிகண்டனை விட்டு எடுக்க சொன்னபோது திடீரென உதவி ஆய்வாளர் சரவணனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட உதவி ஆய்வாளர் சரவணன் துப்பாக்கியால் தாக்க முயன்ற மணிகண்டனை சுட்டார். இதில் மார்புப்பகுதியில் குண்டு பாய்ந்ததால் கீழே விழுந்த மணிகண்டனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை எந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீருடையுடன் செல்லும் போலீசாரை கண்டதும் பொதுமக்களாக இருந்தாலும், குடிபோதையில் தகராறில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் அமைதியாகி விடுவதோ, சண்டையிடுவதை நிறுத்திக்கொள்வதோ வழக்கம். சமீப காலமாக போலீஸ் சீருடையுடன் இருந்தாலும் குற்றவாளிகளும், குடிபோதையில் இருப்பவர்களும் எந்த பயமும் இல்லாமல் போலீசாருடன் சண்டை போடுவதும், தாக்குவதும் சகஜமாகி விட்டது. இதற்கு காரணம் போலீசார் மீதான பயம் முற்றிலும் போய்விட்டது என்பதுதான். குற்றவாளிகளை கைது செய்ததும் உள்ளூர் அரசியல்வாதிகளோ, காவல்துறை அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களோ உடனடியாக குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பது தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். எனவே தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் காவல்துறை மீதான பயம் குற்றவாளிகளுக்கு இருக்கும்படி காவல்துறை நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.

Comments (0)
Add Comment