எஸ்.பி. கனவு அம்பேல்… கலக்கத்தில் நேரடி எஸ்.ஐ.க்கள்

-சிவ. செல்லையா-

நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்பட்ட பின் துறைரீதியாக நடத்தப்படும் தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்கி பல பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் தேர்வில் பெற்ற சீனியாரிட்டியை எடுத்துக் கொள்ளாமல் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்த சீனியாரிட்டியைத் தான் பதவி உயர்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சுப்­ரீ­ம் கோர்ட் உத்தரவால் எஸ்.பி. சீனியாரிட்டியில் முதல் இடத்தில் இருக்கும் கூடுதல் எஸ்.பி. 216-வது சீனியாரிட்டிக்கு தள்ளப்பட்டு எஸ்.பி. பதவி கானல் நீராகும் நிலை உருவாகியுள்ளது.

1996ம் ஆண்டு 500 எஸ்­ஐக்கள் தேர்­வு

கடந்த 1996-ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.க்கள் 500 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டு 500 நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அசோக்நகர் காவலர் பயிற்சிப் பள்ளி மற்றும் வீராபுரம் ஆயுதப்படை வளாகத்தில் 10 மாத பயிற்சியும் வழங்கப்பட்டது.

தேர்வு நடத்தி 100 காவ­லர்கள் 1997ம் ஆண்டு சேர்ப்­பு

இந்நிலையில் காவல்துறையில் காவலராக சேர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு நேரடி எஸ்ஐ தேர்வில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அறிவித்து கூடுதலாக 100 பணியிடங்களும் சேர்க்கப்பட்டது. இதன்படி காவலர்களாக பணியாற்றிவரும் 100 காவலர்களுக்கும் தனியாக தேர்வு நடத்தப்பட்டு பயிற்சிக்கு 1997-ம் ஆண்டு சேர்க்கப்பட்டனர். 1996-ம் ஆண்டு பேட்ஜ் எஸ்.ஐ.கள் பயிற்சியின் போது நடத்தப்பட்ட கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடும் போட்டிகள், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்கப்பட்டது.

500 பேரில் பெரும்­பா­லோனோர் ஓய்­வு

இவ்வாறு பணியில் சேர்ந்த 500 எஸ்.ஐ.களில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற நிலையில் பலர் கூடுதல் எஸ்.பி.க்களாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பயிற்சியின் போது நடத்தப்பட்ட தேர்வில் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான சீனியாரிட்டி கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டது.

தயா­ரான எஸ்பி பதவி உயர்வு பட்­டி­யல்

இதனால் 1996 பேட்ஜ் எஸ்.ஐ.க்களில் குறைந்த பட்சம் 10 பேருக்காவது மாவட்ட எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். இதற்கேற்றாற் போன்று அதிக எண்ணிக்கையிலான மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இதில் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் கூடுதல் எஸ்.பி்.க்கள் சிலருக்கும் பதவி உயர்வு வழங்குதற்கான பட்டியலும் தயாரானது.

சுப்ரீம் கோர்ட்டில் தள்­ளு­ப­டியான வழக்­கு

கடந்த 1997-ம் ஆண்டு 20 சதவீதம் காவல்துறை கோட்டாவில் தேர்வு பெற்ற 100 பேரும் தங்களுக்கு 1986 பேட்ஜ் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என ஐகோர்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. காரணம் 1997-ம் ஆண்டுதான் காவல் துறையில் 20% அமல்படுத்தப்பட்ட நிலையில் முன்கூட்டியே சீனியாரிட்டி கேட்பது தவறு என கூறி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

2008ம் ஆண்டு எஸ்­ஐக்­க­ளுக்கு அடித்த அதிர்ஷ்­டம்

இதன் பின்னர் 2000 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் 20% கோட்டா அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2008-ல் தேர்வு செய்யப்பட்ட கோட்டா எஸ்.ஐ.கள் தங்களுக்கு 2000-ம் ஆண்டு சீனியாரிட்டி வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்கூட்டிய சீனியாரிட்டி பெற்று விட்டனர். இதனால் எஸ்.ஐ தேர்வு பெற்ற 3 ஆண்டுகளில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறும் அதிர்ஷ்டம் கிடைத்தது. கடந்த 2000-ம் ஆண்டு முதலே நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பள்ளியில் சேர்ந்த சீனியாரிட்டி வழங்கப்படாமல் பயிற்சியின் போது நடத்தப்படும் மார்க்குகள் அடிப்படையில்தான் சீனியாரிட்டி பிக்ஸ் செய்யப்பட்டு இதனடிப்படையில் தான் பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

முறை­யான வாதத்தை எடுத்து வைக்காத உள்­து­றை

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டியும், பதவி உயர்வும் வழங்கப்பட்டது தவறு. பயிற்சியில் சேர்ந்ததன் அடிப்படையில்தான் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என தொடரப்பட்டபோது தமிழக உள்துறையும், காவல்துறையும் முறையான வாதத்தை எடுத்து வைக்காத்ததன் விளைவாக கடந்த 1995-ம் ஆண்டு முதல் நேரடி எஸ்ஐகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சியில் சேர்ந்த நாளுக்கான சீனியாரிட்டி வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததோடு 60 நாட்களுக்குள் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து பேனல் தயார் செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்தது.

உச்­ச­நீ­தி­மன்­றத்தில் அப்­பீல்

இதனால் தேர்வு மூலம் சீனியாரிட்டியும், பதவி உயர்வும் பெற்று கூடுதல் எஸ்.பி.க்களாகவும், டிஎஸ்பிக்களாகவும் பணியாற்றி வருபவர்கள் அதிர்ச்சியடைந்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர். காவல்துறை சார்பில் தேர்வு நடத்தி சீனியாரிட்டி வழங்கி பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில் பயிற்சியில் சேர்ந்தவர்­க­ளுக்­கு சீனியாரிட்டி வழங்கினால் பலரும் சீனியாரிட்டியில் மிகவும் பின்தங்கி அடுத்த பதவி உயர்வு பெறமுடியாது. துறை ரீதியாக நடத்திய தேர்வு மார்க்ககுகள் செல்லாது என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், காவல்துறையும் முறையே அப்பீல் செய்து வாதத்தை சரியாக எடுத்துரைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கானல் நீரான எஸ்பி பத­வி

ஐகோர்ட்டின் தற்போதைய உத்தரவால் கூடுதல் எஸ்.பி.க்களாக பணியாற்றி எஸ்.பி. பதவி உயர்வுக்கு காத்துக் கொண்டிருந்த அதிகாரிகளும் இந்த உத்தரவால் 2 பிரிவாக பிரிந்து விட்டனர். காரணம் மார்க் சீனியாரிட்டியில் முதல் 10 இடத்தில் இருப்பவர்களுக்கு பயிற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை புதிதாக ஏற்படுத்தினால் எஸ்.பி. பதவி என்பதே கானல் நீராகி விடும். தற்போது எஸ்.பி. சீனியாரிட்டியில் முதல் இடத்தில் இருப்பவர் பயிற்சியில் சேர்ந்த சீனியாரிட்டி வழங்கினால் 254 பேர் சீனியாரிட்டிக்கு தள்ளப்படுவார். இதனால் இவர் எஸ்.பி.யாக முடியாது. இதே போல தற்போதைய முதல் 10 இடத்தில் சீனியாரிட்டியில் உள்ள கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பி பதவி உயர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தவர்களின் கனவு கனவாகவே போய்விடுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.

எதிர்­பார்ப்­பு நிறை­வே­று­மா!

துறை சார்பில் தேர்வு நடத்தி அதில் அதிக மார்க்குகள் பெற்றதே செல்லாது என்ற கோர்ட் உத்தரவை காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதாடி தங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு……

Comments (0)
Add Comment