தந்தையை கொ ** செய்த பிரபல ரவுடியை – 17 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த மகன்!!

17 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி வீட்டின் சமையல் அறைக்குள் ஒளிந்துகொண்டிருந்தபோதும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கொடூர சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.

சென்னை டி.பி. சாத்திரம் ஜோதியம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் புள்ளான் என்கிற ராஜ்குமார். இவரது தந்தை ராஜா மாநகராட்சி துப்புரவு பணியாளராவார். தாயார் விஜயா 100-வது வட்ட அதிமுக பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சஞ்சய்குமார், கவின் ஆகிய 2 மகன்களும் உள்ளார். இவர் டெக்கரேஷன் வேலை பார்த்து வந்தார். இவர்மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் டி.பி சத்திரம், அண்ணாநகர், கீழ்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளது. சரித்திரப்பதிவு குற்றவாளியான இவர் டி.பி. சத்திரம் ஜோதியம்மாள் 3-வைத்து தெருவில் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 9 பேர் கும்பல் கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். இதைப்பார்த்த புள்ளான் அலறியடித்தபடி தெருவில் ஓட்டமெடுத்தார். அந்த கும்பலும் விரட்டி சென்றபோது புள்ளான் அருகில் உள்ள வீட்டிற்குள்  நுழைந்துவிட்டார்.

புல்லானை விரட்டி வந்த 9 பேர் கும்பலும் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்ததை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அலறினர். வீட்டுக்குள் ஓடிய புள்ளான் சமையல் அறைக்குள் ஒளிந்திருந்தார். இவரை கண்டுபிடித்த கும்பல் சமையல் அறைக்குளேயே சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதைப்பார்த்த வீட்டில் உள்ள பெண்கள் கதறினார். அவர்களை விரட்டிவிட்டு தொடர்ந்து வெட்டியதில் புள்ளான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின்னர் கொலை கும்பல் சாவகாசமாக வீட்டைவிட்டு வெளியே சென்று இருசக்கர வாக்கங்களில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். திரைப்பட காட்சிகளில் வருவதை போல பட்ட பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.பி. சத்திரம் போலீசார் விரைந்து வந்து புள்ளான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

டி.பி. சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திரைப்படங்களில் வருவதைப்போல பழிக்கு பலியாக நடந்த கொலை சம்பவம் என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான புள்ளான் கடந்த 2008ம் ஆண்டு டி.பி. சத்திரம் 32-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தார். இவரது மகன் யுவனேஸ் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தையின் சாவுக்கு காரணமான புல்லானை பழிக்கு பழி வாங்க வெண்டும் என யுவனேஸ் சபதம் எடுத்திருந்தாராம். தன்னுடைய தந்தையை புள்ளான் கொலை செய்ததைப்போலவே அவரையும் கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்த யுவனேஸ் பல ஆண்டுகளாக இதற்கு திட்டமிட்டார். எப்போதும் தன்னுடன் புள்ளான் அடியாட்களுடன் சுற்றி வந்ததால் அவரை ஒன்றும் செய்ய முடியாமல் யுவனேஷ் தவித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு சென்றுவிட்டு புள்ளான் மட்டும் தனியாக நடந்து வருவதை பார்த்த யுவனேஸ் தன்னுடைய நண்பர்களான டி.பி. சத்திரத்தை சேர்ந்த இஸ்ரவேல், காட்சன் என்கிற ஷோபன்ராஜ், டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த அஜீத் என்கிற ஜெயகாந்தன், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாய்குமார், அமைந்தகரை கன்னையா தெருவை சேர்ந்த கிளி என்கிற கவுதம், அயனாவரத்தை சேர்ந்த பேட்ட அர்ஜுனன், வில்லிவாக்கத்தை சேர்ந்த கணேசன் என்கிற ரேசர் கணேசன் , சூர்யா ஆகியோருக்கு போனில் தகவல் கொடுத்து இருசக்கர வாகனத்தில் வந்து சுற்றி வளைத்து பழிக்கு பலியாக கொலை செய்தது தெரியவந்தது. 4 தனிப்படைகள் அமைத்து யுவனேஸ் உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த யுவனேஷும், காட்சனும் அண்ணாநகர் காவல் nilayathil சரணடைந்தனர். தப்பி ஓடிய சாய்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். பொதுவாக திரைப்படங்களில்தான் தந்தையை கொலை செய்தவரை பழிக்கு பழிவாங்குவேன் என கூறி கதாநாயகன் பல ஆண்டுகள் கழித்து அழிப்பது வழக்கம். ஆனால் 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தந்தையின் கொலைக்கு பழிவாங்க கல்லூரியில் படிக்கும் மகன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்ட பகலில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்ட பகலில் சர்வசாதாரணமாக பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டி சென்று கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் உள்ளவர்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கி உள்ளது. போதை பழக்கத்திற்கு ஆளான வாலிபர்கள் எந்த பின்விளைவை பற்றியும் கவலைப்படாமல் இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியதாகும் .

Comments (0)
Add Comment