தூக்­கத்தை கெடுத்த ரத்­தீஷின் தலை­ம­றைவு: அமலாக்­கத்­துறை சம்மன் பயத்தால் நடு­ந­டுங்கும் ஐபிஎஸ் அதி­கா­ரிகள்:

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டுச்சாம்’ங்குறது கிராமத்து பழமொழி. ஆனால் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனைக்கு பயந்து துணை முதல்வருக்கு வலதுகரமாக இருந்து ஒட்டு மொத்த அதிகாரிகளையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் சர்வ அதிகாரம் பெற்றிருந்த காவல்துறை அதிகாரியின் சகோதரர் ரத்தீஷ் தலைமறைவானது மேலிடத்தைவிட காக்கிச்சட்டை உயர் அதிகாரிகள் தூக்கத்தையே கெடுத்துருச்சு.

காரணம்  ரத்தீஷுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் தங்களைவிட மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் உயரதிகாரிகளைக்கூட துணை முதல்வருக்கு நெருக்கம் என கூறி அவமதித்து வந்துள்ளனர். எதற்கெடுத்தாலும் ரத்தீஷ் மூலம் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்ய வைத்து துணை முதல்வர் கூறியதாக மிரட்டியே தங்களை அசைக்க முடியாத சக்தியாக காட்டி கெத்தாக வலம் வந்தனர்.

காவல்துறைக்கே தலைமை பொறுப்பு வகிக்கும் டிஜிபிக்கே சவால்விட்டு மிரட்டும் அளவிற்கு சர்வ அதிகாரத்துடன் வலம் வந்தனர். எதிர்பாராதவிதமாக அமலாக்கத்துறை சோதனையால் ரத்தீஷ் தலைமறைவாகிவிட இந்த அதிகாரிகள்தான் பயத்தில் தவித்து வருவதாக காவல்துறை வட்டாரங்களே கண்ணடித்து கொண்டாடி வருகிறதாம்.

ரத்தீஷுடன் நெருக்கமாக இருந்து சாதித்த பல காரியங்களில் அவருடனான போன் அழைப்புகள, இரவு பார்ட்டிகளில் கலந்துகொண்ட செல்போன் படங்கள், சிசிடிவி காட்சிகள், வாட்ஸ் அப் உரையாடல்களை கண்டிப்பாக அமலாக்கத்துறை சேகரித்திருக்கும். இதனால் தங்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க ஆரம்பித்தால் தாங்களும் மாட்டிக்கொள்வோமே என்பதுதான் இவர்கள் அச்சம்.

காவல்துறை உயர் அதிகாரியே ரத்தீஷிடம் மிகவும் நெருக்கம் காட்டியதோடு டிஜிபி அலுவலகத்திலேயே பலமுறை ரத்தீஷ் நேரில் வந்து பேசி சில உத்தரவுகளை பிறப்பித்து செய்ய வைத்ததும் உண்டாம். இதேபோல சர்ச்சைக்கு பேர்போன அதிகாரி ரத்தீஷ் பெயரை பயன்படுத்தி போட்ட ஆட்டங்களும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவரைப்போன்றே காவல்துறையில் முக்கிய பதவிகளில் தற்போது இருக்கும் அதிகாரிகளும் ரத்தீஷுடன் நெருக்கம் காட்டி தமிழகம் முழுவதும் செய்து கொடுத்த அதிகார துஷ்பிரயோகங்களும் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கினால் என்னாவது என தவித்து வருகின்றனராம்….

இதுநாள் வரை மேலிட அதிகார துணையின் உதவியோடு அதிகார போதையில் மிதந்த உயர் அதிகாரிகள் தற்போது பீதியடைந்த முகத்துடன் உலா வருவதைப் பார்த்து இவர்களால் பாதிக்கப்பட்ட பல அதிகாரிகள் உள்ளூர் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்…

பதவி சுகத்திற்காக மேலிடத்திற்கு நெருக்கமானவருடன் சுற்றி பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களை செய்துவிட்டு இப்போது தவித்து என்ன பயன் என்கின்றனர் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்…. அமலாக்கத்துறை அழைப்பு எப்போது வருமோ என்ற பயத்தில் உள்ள அதிகாரிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள்? தண்டிக்கப்பட வேண்டியவர்களா?

Comments (0)
Add Comment