15 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வாரம் தோறும் புதன்­கி­ழமை அன்று புகார் மனுக்­களை நேர­டி­யாகப் பெற்று அவற்றின் நட­வ­டிக்கை எடுக்க அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்டு

வரு­கி­றார். அதன்­படி இன்று (03.09.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 15 புகார் மனுக்களை ஆணையர் அருண் பெற்றார். அவற்றின் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த முகாமின் போது துணை ஆணையாளர் (தலைமையிடம்) கீதா உடன் இருந்தார்.

Comments (0)
Add Comment