கெத்து காட்ட உயிரை வாங்­கிய கும்பல் மாவுக்கட்டு போட்ட போலீசார்

கஞ்சா விற்பனையில் யார் பெரியவர் என்ற கெத்து காட்ட நாட்டு வெடிகுண்டு வீசி புது மாப்பிள்ளையை கொலை செய்த வழக்கில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூண்டு முறை வெடிகுண்டுகளை வீசி கெத்துக்கு கொலை செய்த 3 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். ராஜ்கமல். தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீவர்ஷினி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் சன்சிட்டி பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இரவு கடம்பத்தூர் சென்று விட்டுமோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பனையில் யார் பெரிய ஆள் என்பதில் உள்ள முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். ராஜ்கமல் (28).இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் ராஜ்கமல் திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீவர்ஷினி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜ்கமல் தன் மனைவியுடன் கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் சன்சிட்டி பகுதியில் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு கடம்பத்தூர் சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவரது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல் ராஜ்கமல் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயற்சி செய்தனர். பதறிப்போன ராஜ்கமல் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். விடாமல் விரட்டிய மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்று மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள்.

இரண்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்திலும் தப்பிய ராஜ்கமல் உயிர் பிழைக்க மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். மோட்டார் சைக்கிளில் விரட்டிய கும்பலும் விடாமல் துரத்தி வந்தனர். மூன்றாவது இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியபோது வெடிகுண்டு ராஜ்கமல் மீது விழுந்து வெடித்ததால் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தபோதும் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடியபோது விரட்டி வந்த மர்ம நபர்கள் ராஜ்கமலை மடக்கி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர். இதனைத்தடுக்க வந்த ராஜ்கமலின் கூட்டாளி தீபனையும் அரிவாளால் வெட்டியதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் சீனிவாசன் என்பவரும், கொலை செய்யப்பட்ட ராஜ்கமல் இருபிரிவாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியால் யார் பெரிய ஆள் என்பதில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செஞ்சிபானம்பாக்கம் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜ்கமல் மற்றும் சீனிவாசன் குரூப்-பை சேர்ந்தவர்களுக்கும் கலந்துகொண்டனர். துக்க வீட்டிலும் இரு தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜ்கமல் எதிர்தரப்பை சேர்ந்த சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் ராஜ்கமலை தீர்த்துகட்ட திட்டமிட்டு இவரை பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். ராஜ்கமல் தனது கூட்டாளியுடன் இரவில் செல்வதை கவனித்து பின்தொடர்ந்து வந்து நாட்டுவெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.

கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராஜ்கமலை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் -பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி கடம்பத்தூர் மேட்டு தெருவை சேர்ந்த சீனிவாசன், அஷ்டலஷ்மி நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத், நாதன், என்.எஸ்.சி. போஸ் தெருவை சேர்ந்த யுவன்ராஜ், புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், செஞ்சிபானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நெல்சன் மற்றும் சிறுவன் உஸ்மான் உள்ளிட்ட 7 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடம்பத்தூர் மேல்பகுதி இளைஞர்களுக்கும், கீழ்பகுதி இளைஞர்களுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி இருந்ததாகவும், இதில் நாங்கள் தான் கெத்து என நிரூபிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் புதுமாப்பிள்ளை ராஜ்கமலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பேர் பாத்ரூம் வழுக்கியதாலும், மற்றொருவருக்கு காலில் மாவு கட்டுப்போட்டும் போட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். யார் கெத்து என்பதற்காக புதுமாப்பிள்ளையை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment