நிரந்தர டிஜிபி நியமன விவ­காரம்: அதிகாரிகளுக்கிடையே ஏற்­பட்­ட மோதலால் பர­ப­ர­பக்கும் டிஜிபி அலு­வ­ல­கம்

டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தலைமை செயலாளருக்கு எதிராக 2-வது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாவதோடு, நிரந்தர டிஜிபியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அனுப்பிய பட்டியலில் இருந்து தேர்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி டிஜிபியை நியமிக்க நேரிட்டால் அரசுக்கு ஆதரவாக புதிய டிஜிபி செயல்படாமல் எதிராக செயல்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால் தேர்தல் நேரத்தில் பெரும் சிக்கல் நேரிடும். எனவே உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்பாகவே புதிய டிஜிபியை நியமனம் செய்துவிடலாம் என அரசின் உயர் அதிகாரி அறிவுரை வழங்கியும் 2 காவல்துறை அதிகாரிகள் டிஜிபியை நியமனம் செய்ய விடாமல் தடுப்பதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த அதிகாரிகளால் கண்டிப்பாக முதல்வருக்குத்தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர்.

நிரந்­தர டிஜிபி நியமன விவகாரத்தில் அதிகாரிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாம். நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என மத்திய பணியாளர் தேர்வாணையம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கூட்டத்தை நடத்தி சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட 3 அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்து 20 நாட்களாகியும் இன்னும் நியமனம் நடக்கவில்லை. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மக்கள் கண்காணிப்பாக அமைப்பின் நிறுவனருமான ஹென்றி டிபேணும் உச்சநீதிமன்றத்தில் தலைமை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நிரந்தர டிஜிபியை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையும் மீறி நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் அரசியல் காரணங்களுக்காக வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலைமைச் செயலாளரும் இந்த அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது கண்டிப்பாக அரசுக்கு எதிரான தீர்ப்பு வருவதோடு, நீதிபதிகள் கண்டனத்திற்கும் ஆளாக நேரிடும். தன் மீதும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனமோ, அவமதிப்பு செய்யப்பட்டதாக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய பணியாளர் தேர்வாணையம் அனுப்பிய பட்டியல் அடிப்படையில் புதிய டிஜிபியை உடனடியாக நியமித்துவிடலாம்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய டிஜிபியை குறிப்பிட்ட நாட்களுக்குள் நியமிக்கும்படி கால நிர்ணயம் செய்து புதிய டிஜிபியை நியமித்தால் நீதிமன்றம் நியமித்த டிஜிபி தமிழக அரசுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்க மாட்டார். டிஜிபி ஒத்துழைப்பு வழங்கா விட்டால் அவருக்கு எதிர்க்க எடுக்கும் நடவடிக்கைகளும் உச்சநீதிமன்றத்திற்கு எதிரானதாகி விடும். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் காவல்துறை கண்டிப்பாக அரசுக்கு முழு ஒத்துழைப்பை தராது. இதனால் முதல்வருக்கும், ஆளும்கட்சிக்கும்தான் சிக்கல் ஏற்படுத்தும்.

எனவே உடனடியாக புதிய டிஜிபி நியமனத்தை முடித்து விடலாம் என முதல்வர் அலுவலக அதிகாரியுடன் பேசியுள்ளார். இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து முதல்வருக்கு நெருக்கமான அதிகாரியும் புதிய டிஜிபியை நியமித்துவிடலாம் என காவல்துறை உயர் அதிகாரிகள் 2 பேரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் மத்திய பணியாளர் தேர்வாணையம் கொடுத்துள்ள பட்டியல் அடிப்படையில் சீனியர் டிஜிபியை நியமித்தால் அவர் உரிய ஒத்துழைப்பு தரமாட்டார். தற்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை நிரந்தரமாக்கிவிட்டால் அவர் முழு ஒத்துழைப்பு தருவார் என கூறி சீனியர் டிஜிபி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம்.

உச்சநீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக்கப்போவது நான்தான். எனவே இதில் வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம் என முதல்வருக்கு நெருக்கமான அதிகாரியிடம் தலைமைச் செயலாளர் பிடிவாதமாக கூறி விட்டாராம். இதனால் ஓரிரு வாரத்திற்குள் புதிய டிஜிபி நியமனம் நடக்கும். இல்லையேல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி புதிய டிஜிபியை நியமிக்க நேரிடும் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமனுக்கும் இந்த பதவியில் சுத்தமாக விருப்பம் இல்லையாம். தன்னை இந்த பிரச்சினையில் இருந்து விடுவித்தால் போதும். தனக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் தன்னை வைத்து இந்த அதிகாரிகள் இஷ்டம் போல செயல்படுகின்றனர். இதனால் சிக்கலும், கெட்ட பெயரும் ஏற்படப்போவது தனக்குதான். இதனால் முதல்வரிடமும் கெட்ட பெயர் ஏற்படுத்துவதோடு அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சிக்கல்.

எனவே புதிய டிஜிபியை நியமித்து தன்னை உடனடியாக விடுவித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம். குறிப்பிட்ட அதிகாரிகளின் அதிகார பசிக்கு நேர்மையான அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் சிக்கி தவிப்பதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொந்தளிக்கின்றனர்.

Comments (0)
Add Comment