நகை திருடி போலீசில் சிக்கிய ஊராட்சிமன்ற பெண் தலைவி

பேருந்தில் சீட் கொடுப்பது போல நடித்து பையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிய பெண்ணை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடிக்கண்டுபிடித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி.

காரணம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிக்கியது திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவி என்பதும், இவர்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததுதான் போலீசாரின் அதிர்ச்சிக்கு காரணம். திருடுவதையே தொழிலாக வைத்திருக்கும் இவருக்கு ஊராட்சி மன்ற தலைவியாக பதவி கிடைத்தபோதும் தனது திருட்டு தொழிலை கைவிடாமல் தொடர்ந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வரலட்சுமி. வரலட்சுமியின் தங்கை குடும்ப திருமண விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்தில் சென்றார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு குழந்தையுடன் மீண்டும் சென்னை செல்ல காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். திருமண நாள் என்பதால் சென்னை செல்லும் பெரும்பாலான பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சென்னை செல்லும் அரசு பேருந்து உள்ளே நுழைந்ததும் சீட்டை பிடிக்க கூட்டத்தோடு கூட்டமாக பேரூந்திற்குள் ஏறிச்சென்று ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறம் உள்ள 2 பேர் அமரும் இருக்கையில் தான் கையில் வைத்திருந்த பேக்கை போட்டு இடம் பிடித்தார். பின்னர் கீழே இறங்கி சென்று தனது சகோதரி லதா மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு பெருந்திற்குள் ஏறி தான் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த சீட்டில் அமர சென்றார்.

வரலட்சுமி பிடித்து வைத்திருந்த சீட்டில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்ததோடு, தான் போட்டு வைத்திருந்த போக்கையும் காணாமல் திடுக்கிட்டு போனார். பதறிப்போய் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தான் ஏற்கனவே சீட் போட்டு வைத்திருந்ததாகவும், அதில் வைத்திருந்த பேக்கை காணவில்லை என கேட்டபோது பேக்கை தான் பத்திரமாக எடுத்து வைத்திருப்பதாகவும், தன் அருகில் உள்ள சீட்டில் குழந்தையுடன் அமர்த்துகொள்ளும்படியும் அன்புடன் கூறினார். பின்னர் தனது காலுக்கு அடியில் வைத்திருந்த வரலட்சுமியின் பேக்கை எடுத்துக்கொடுத்தார். வரலட்சுமியும் அந்த பெண்ணின் அருகே குழந்தையுடன் அமர்ந்தார். பேருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அந்த பெண் உடன் வந்த கணவரை காணவில்லை. அவரை தேடி கண்டுபிடித்து வேறு ஒரு பேருந்தில் வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டார்.

சென்னைக்கு வந்த வரலட்சுமி வீட்டுக்கு வைத்து பேக்கை திறந்து பார்த்தபோதுதான் பைக்குள் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகளை காணாமல் திடுக்கிட்டார். அப்போதுதான் தனக்கு சீட்டை கொடுப்பதுபோல நடித்து பேக்கையும் கொடுத்துவிட்டு பேருந்தில் இருந்து திடீரென இறங்கி சென்ற பெண்தான் நகையை திருடியிருக்க வேண்டும் என கருதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் நகை திருடி சென்ற பலே பெண் கில்லடியை தேடிவந்தனர். சம்பந்தப்பட்ட நாளில் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்ற பெண்ணைப் பற்றி காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் போலீசாரும் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா மூலம் ஆய்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் இறங்கி சென்ற பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.

போலீசார் வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் நரியாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 56 வயதான பாரதி என்ற பெண்தான் நூதன முறையில் வரலட்சுமியிடம் இருந்து நகைகளை திருடியவர் என்பதை கண்டுபிடித்தனர். பாரதியை போலீசார் கைதுசெய்ய சென்றபோது கிடைத்த தகவல்கள் போலீசாரையே அதிர செய்தது. காரணம் நகைகளை திருடிய பாரதி நரியாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பதும், இவர் ஆளுகட்சியான திமுகவை முக்கிய நிர்வாகி என்பதும் தெரியவந்தது. ஊராட்சி தலைவியாக இருப்பவர் நகைகளை திருடியிருப்பாரா என போலீஸாருக்கே சந்தேகம் வந்துவிட்டது. இவரைப்பற்றி மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோதுதான் பாரதியின் கில்லாடித்தனம் தெரிந்தது. நரியாம்பட்டு திமுக நிர்வாகியான இவர் மீது ஆம்பூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்து நிலையங்களில் நெரிசலான பேருந்துகளில் ஏறி சீட் பிடித்து கொடுப்பதை போல நடித்தும், கூட்டத்தை பயன்படுத்தியும் இவர் நகைகளை திருடுவாராம். பேருந்துகளில் ஏறி அமர்ந்துகொண்டு சீட் தேடி அலையும் பெண்களிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தன் அருகே அமர வைத்து அவர்கள் பைகளில் வைத்திருக்கும் நகைகளை திருடி சென்றுவிடுவாராம். ஊராட்சி மன்ற தலைவியான பிறகும் தனது தொழிலை கைவிடவில்லையாம்.

திருடிய பணத்திலேயே கோடீஸ்வரியாகி நல்ல பதவியும் கிடைத்தபிறகும் திருட்டு தொழிலை கைவிடவில்லை. திருட்டை கைவிடும்படி குடும்பத்தார் பலமுறை வற்புறுத்தியும் திருட்டை தன்னால் கைவிட முடியாது. அது தனக்கு மிகவும் பிடித்த தொழில் என கூறி ஊராட்சி மன்ற தலைவி பதவியோடு திருட்டு தொழிலையும் செய்து வந்ததும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தான் தெரியாமல் செய்துவிட்டதாக போலீசாரிடம் கண்ணீர் விட்டு அழுத்தத்தோடு தன்னை கைது செய்ய வேண்டாம் என கெஞ்சியுள்ளார். போலீசார் கைவிலங்கு போட்டு சென்னைக்கு அழைத்துவந்துவிட்டனர். இவரிடம் எத்தனை பெண்கள் நகைகளை பறிகொடுத்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேமித்த பணத்தில் சேர்த்துவைத்த ஏழை, நடுத்தர பெண்கள் விழாக்களுக்கு பேருந்தில் செல்லும்போது நகைகளை பைகளில் போட்டு கொண்டு செல்வது வழக்கம். கழுத்தில் அணிந்திருந்தால் நகைகளை திருடிவிடுவார்கள் என கருதிதான் பைகளில் போட்டு கொண்டு செல்கின்றனர்.

இதை நோட்டமிட்டு பேருந்தில் உட்கார சீட்டு கொடுப்பது போல நடித்து நகைகளை பாரதி திருடி எஸ்கிப்பாகிவிடுவாராம். சில நிமிடங்களில் பைகளில் உள்ள நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு எதாவது ஒரு காரணத்தை கூறி பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுவிடுவாராம். இவரிடம் நகைகளை இழந்த பல பெண்களில் கண்ணீருக்கு ஒருநாள் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்பதைப்போல பாரதி மாட்டிக்கொண்டார். கோடிக்கணக்கில் பணமும், கவுரவமான ஊராட்சி மன்ற தலைவி பதவியும் இருந்தபோதும் திருட்டை கைவிடாமல் கைவரிசை காட்டி போலீசாரையே திணறடித்து இவரது செயல் போலீஸாருக்கே பலத்த அதிர்ச்சிதான்.

Comments (0)
Add Comment