25 குரூப் 1 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். சீனியாரிட்டி அறிவிப்பு * தமி­ழக அரசு உத்­த­ர­வு

தமிழக காவல்துறையில் பணியாற்றும் நாகை மாவட்ட எஸ்.பி. செல்வகுமார், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் நாமக்கல் எஸ்.பி.யாக பணியாற்றும் விமலா உள்ளிட்ட 25 குரூப் ஒன் அதிகாரிகளுக்கு 2014-ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். சீனியாரிட்டியை நியமித்து மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயக்குமார்                              செல்வகுமார்                    டாக்டர் சுதாகர்

தமிழக காவல்துறையில் நேரடி ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வு எழுதி நேரடியாக டி.எஸ்.பி.க்களாக பணியில் சேரும் அதிகாரிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.பி. அந்தஸ்து பெறுவர்­. இதன் பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகே தமிழக கேடர் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படுகிறது. அத­னை­ய­டுத்து ஐ.பி.எஸ். சீனியாரிட்டி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

விமலா                                               சுரேஷ்குமார்                      முத்தரசி

இவ்வாறு ஐ.பி.எஸ். சீனியாரிட்டி வழங்கப்பட்ட பிறகே சீனியர் எஸ்.பி. அந்தஸ்தும், பின்னர் டி.ஐ.ஜி பதவி உயர்வும் பெற முடியும். இந்த ஆண்டும் டி.ஐ.ஜி அந்தஸ்து பெரும் 17 குரூப் ஒன் அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ் சீனியாரிட்டி அந்தஸ்து வழங்க மிகவும் தாமதமானதால் எஸ்.பி.க்களாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இந்த ஆண்டுதான் டி.ஐ.ஜி. பதவி உயர்வு பெற உள்ளனர்.

ஜெயலட்சுமி                           மயில்வாகனன்                               சரவணன்

இதேபோல தமிழக காவல்துறையில் 2001ம் ஆண்டு பணியில் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் தற்போது எஸ்.பி.க்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டுதான் ஐ.பி.எஸ். அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இந்த அதிகாரிகளுக்கு தற்போது மத்திய உள்துறை ஐ.பி.எஸ். சீனியாரிட்டி நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

செந்தில் குமார்                       சுப்புலட்சுமி                               மகேந்திரன்

இதன்படி நாகப்பட்டினம் எஸ்.பி. செல்வகுமார், திருவண்ணாமலை எஸ்.பி. டாக்டர் சுதாகர், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார், தலைமையிட உதவி ஐ.ஜி. முத்தரசி, நாமக்கல் எஸ்.பி. விமலா, தமிழ்­நாடு போலீஸ் அகாடமி எஸ்.பி. சுரேஷ்குமார் உள்ளிட்ட 25 தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு 2014ம் ஆண்டு ஐ.பி.எஸ் சீனியாரிட்டி நிர்ணயித்து மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டாலின்                                 செல்வராஜ்                                  சுந்தர வடிவேல்

இதன்படி எஸ்.பி. மணி, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. செல்வகுமார், திருவண்ணாமலை எஸ்.பி. டாக்டர் சுதாகர், எஸ்.பி.க்கள் செந்தில்குமார், முத்தரசி, பெரோஸ்கான் அப்துல்லா, சக்திவேல், நாகஜோதி, ராஜராஜன், நாமக்கல் எஸ்.பி. விமலா, போலீஸ் அகாடமி எஸ்.பி. சுரேஷ் குமார், பாஸ்கரன், சண்முகப்பிரியா, கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.க்கள் மயில்வாகனன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், சரவணன், செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகிய 25 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். சீனியாரிட்டி பட்டியலுக்கான உத்தரவு வெளியாகி உள்ளது.

பாஸ்கரன்                                                    சக்திவேல்                       சண்முகப்பிரியா

இவர்களுக்கு காலிப்பணியிடங்கள் அடிப்படையில் சீனியர் எஸ்.பி. அந்தஸ்தும், பின்னர் டி.ஐ.ஜி. பதவி உயர்வும் வரும் ஆண்டுகளில் வழங்கப்படும். ஏற்கனவே தமிழக காவல்துறையில் பணியாற்றும் 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் ஒட்டு மொத்தமாக 25 குரூப் ஒன் அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டு மொத்தமாக ஐ.பி.எஸ். சீனியாரிட்டி நிர்ணயித்து மத்திய உள்துறை அரசாணை வெளியிட்டிருப்பது காவல்துறை அதிகாரிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

காரணம் இந்த ஆண்டு டி.ஐ.ஜி. அந்தஸ்து பெரும் சீனியர் எஸ்.பி.க்களில் பலரும் டி.ஐ.ஜி. பதவி உயர்வு கிடைத்து 4 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு, 2 ஆண்டுகளுக்குள் பதவி ஓய்வு பெரும் நிலை உள்ளது. இவர்களால் ஐ.ஜி. பதவி உயர்வை கூட பெற முடியாமல் டி.ஐ.ஜி.க்களாகவே ஓய்வுபெற காரணம் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்தும், ஐ.பி.எஸ். சீனியாரிட்டியும் நிர்ணயம் செய்யப்படாததுதான் என்கின்றனர் குரூப் 1 அதிகாரிகள். இவர்களது மன வேதனையை போக்க குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கவும், பதவி உயர்வு கிடைக்கவும் உயர் அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments (0)
Add Comment