சென்னை மாநகர காவல்துறையில் மையப்பகுதில் உள்ள ‘பேட்டை’ பெயர் கொண்ட காவல்நிலைய எல்லையில் மாநகர உளவுத்துறை பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மிகுந்த ‘குணமானவர்’. இவர் லெவல்-2 பதவியில் இருந்தபோதே ரவுடிகள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்களுடன் சேர்ந்து தகவல்கள் மேலிடம் செல்லாமல்பார்த்துக் கொள்வதாக கூறி பல ஆயிரங்களை வசூலிப்பது வழக்கமாம்.
இவரைப்பற்றி பல புகார்கள் குவிந்ததால் உயர் அதிகாரிகள் உத்தரவில் ‘குளிர்ச்சியான’ காவல் நிலையத்திற்கு தூக்கியடிக்கப்பட்டாராம். ஆனால் பதவி உயர்வுடன் மீண்டும் பேட்டை சரகத்தின் உளவுத்துறை பிரிவிற்கு தன் மேலிட செல்வாக்கை பயன்படுத்தி பதவிக்கு தற்போது வந்துள்ளாராம்.
மீண்டும் வந்தவர் ரவுடிகளுடனான நட்பை மிகவும் கூடுதலாக்கி கொண்டதுடன் ரவுடிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்குகூட அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் செய்து கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாக பேட்டை வட்டார காக்கிகள் முனுமுனுக்கின்றார்களாம். ரவுடிகள் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் மாநில, மாநகர தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு இதுபற்றி புகார்கள் மீண்டும் வந்ததால் அப்பிரிவினரும் விசாரித்து உளவுக்காரரை வேறு பிரிவிற்கு மாற்றும்படி பரிந்துரை செய்துள்ளார்களாம். ஆனால் மாநகர உளவுத்துறையில இருக்கும் சில அதிகாரிகளுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. அறிக்கையை குப்பையில் வீசிட்டு கண்டு கொள்ளாம விட்டுட்டாங்களாம். ஒரு புறம் மாநகர தலைமை பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரி ரவுடிகளே இல்லாத நிலை இருக்கனும்ணு கங்கணம் கட்டிகிட்டு இருக்கும்போது ரவுடிகளுக்கே மோதலுக்கு அப்பாயிண்ட் தர்றவரை வச்சி ரவுடிகளை எப்படி கட்டுப்படுத்தப்போறார்னு புலம்புறாங்க ரவுடி கண்காணிப்பு அதிகாரிங்க….