நான் சிக்கிக் கொண்டால் மேலிடமும் உள்ளே போகணும்: மிரட்டும் அமைச்­சர்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பதவி நியமன ஊழல் மற்றும் டெண்டர் விட்டதில் 7.5 சதவிகித லஞ்சப் பணத்தை கட்சி நிதியாக அமைச்சர் நேரு பெற்றதாக அமலாக்கதுறை ஆதாரங்களுடன் அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் சக அமைச்சர் மற்றும் மேலிட முக்கிய புள்ளியின் உத்தரவின்பேரில்தான் ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

எனக்கோ எனது பதவிக்கோ எதாவது சிக்கல் ஏற்பட்டால் ஒட்டுமொத்த பணத்தையும் மேலிட முக்கிய பிரமுகரிடம்தான் ஒப்படைத்தேன் என அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் கொடுக்கவும் தயார் என அமைச்சர் விடுத்த மிரட்டல் காரணமாக மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளியை முதலில் கைதுசெயய அமலாக்க துறை திட்டமிட்டிருப்பதால் முக்கிய புள்ளியும், குடும்பத்தாரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை தமிழக டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அனுப்பிய 245 பக்க கடிதம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கடந்த ஜூன் மதம் நடந்த பதவி நியமனத்தில் தோல்வி அடைந்த 150 தேர்வர்களிடம் தலா 25 லட்சம் முதல் 30 லட்சம் என லஞ்சமாக 888 கோடி ரூபாயை வசூலித்து பதவி வழங்கப்பட்டுள்ளது.

10 ருபாய் நோட்டை லஞ்ச பணத்தை ரொக்கமாக குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைப்பதற்கான ரகசிய குறியீடாக பயன்படுத்தியது, 10 ரூபாய் நோட்டை வாட்ஸ் அப் மூலம் போட்டோ எடுத்து அனுப்பியது , ஹவாலா பிரமுகர்கள் மூலம் இந்த பணம் கைமாறியது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியது அமலாக்கத்துறை. இவ்வாறு நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைமூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கடிதத்தில் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என மேலிடத்தின் மூலம் வந்த அழுத்தம் காரணமாக டிஜிபி அமலாக்கத்துறை கடிதத்தை கிடப்பில் போட்டுவிட்டார். இதனால் கடுப்பான அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த வெடிகுண்டை கடிதம் மூலம் அனுப்பி வைத்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மத்திய அரசின் நிதி மற்றும் நபார்டு வாங்கி மூலம் பெற்ற கடன் பணத்தில் நடத்தப்பட்ட பல்வேறு குடிநீர், கழிப்பறை, சாலை வசதிகள் உள்ளிட்ட வேலைகளில் கான்ட்ராக்டர்களிடம் இருந்து 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் கமிஷன் தொகையாக பெற்றதற்கான 268 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை இரண்டாவது கடிதத்தை அனுப்பி இந்த ஊழல் குறித்தும் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு பதிவு செய்யவேண்டும்.

இந்த வழக்கு பதிவின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும் கடிதத்தில் கான்ட்ராக்டர்களிடம் இருந்து அமைச்சர் உதவியாளர் பணம் கேட்கும்போது கட்சி நிதியாக பணம் தர வேண்டும் என மெசேஜ் அனுப்பியிருந்ததையும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்தடுத்து தனது துறையில் நடந்த ஊழல்கள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் நேரு தரப்பினர் இந்த ஆதாரங்கள் வெளியானது எப்படி? என ரகசியமாக விசாரித்தனர்.

வருமான வரித்துறை சோதனையின்போதுதான் இந்த ஆதாரங்கள் சிக்கியது. இந்த ஆதாரங்களை வருமான வரித்துறைக்கு போட்டுக்கொடுத்தது யார்? என தீவிரமாக விசாரித்தபோது கிடைத்த தகவல் அமைச்சர் தரப்பு மட்டுமின்றி அமைச்சரையே தலைசுற்ற வைத்துவிட்டதாம். தனது துறை மூலம் அமைச்சர் புகுந்து விளையாடுவதோடு, மேலிடத்திற்கு தர வேண்டி ய உரிய பங்கை மிகவும் குறைத்துக்காட்டி பல ஆயிரம் கோடியை அமைச்சர் தரப்பு சுருட்டியதை மேலிடம் முக்கிய பிரமுகர் உளவுத்துறை மூலம் கண்டு பிடித்துள்ளார்.

இதனால் கடுப்பாகி அமைச்சரிடம் கேட்டபோது இதற்குமேல் கட்சி நிதி என்ற பெயரில் தரும் பணத்தை அதிகப்படுத்தி தர முடியாது. வரும் சட்டசபை தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் தான்தான் தேர்தல் செலவழிக்க வேண்டி உள்ளது. எனவே இதற்குமேல் தன்னிடம் பணம் எதிர்பார்க்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியதால் மேலிட முக்கிய பிரமுகர் கடுப்பாகி உளவுத்துறை மூலம் வருமான வரித்துறைக்கு போட்டுக்கொடுத்தது தெரியவந்ததாம். அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு இளைய அமைச்சரும் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளதாம்.

இதனால் மேலிட முக்கிய பிரமுகர் மீது கடும் ஆத்திரத்தில் உள்ள அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தார் அமலாக்கத்துறையிடம் முழு ஆதாரங்களையும் கொடுத்து என்னை சிக்க வைத்துவிட்டதாக கருதுகிறீர்கள். டெண்டர் மூலம் பெற்ற கமிஷன் தொகை கட்சி நிதி என்ற பெயரில் மேலிட பிரமுகர் கூறியபடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஹவாலா பிரமுகர்கள் மூலம் அனுப்பி வைத்தோம். அமலாக்கத்துறை இந்த ஆதாரங்களை எல்லாம் கண்டுபிடித்துவிட்டனர்.

எப்படியும் தன்னை அமலாக்கத்துறை கைதுசெய்துவிடுவார்கள். அப்படி கைது செய்யும்பட்சத்தில் மேலிட முக்கிய பிரமுகரிடம்தான் டெண்டர் கமிஷன் தொகை முழுவதையும் கொடுத்தேன். அவர் கூறியபடியே துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைத்தேன் என்ற ஆதாரங்களை கொடுத்துவிடுவேன். இதனால் நான் மட்டுமின்றி மேலிடம் ஒட்டுமொத்தமாக அமலாக்கத்துறையிடம் சிக்கிக்கொள்ளும் என ஆவேசமாக கூறியுள்ளார். இதைக்கேட்ட மேலிடம் அதிர்சியடைந்துவிட்டனராம்.

அமலாக்கத்துறையிடம் கிடைத்துள்ள இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர், சகோதரர், குடும்பத்தார் உள்ளிட்டோரை கண்டிப்பாக கைது செய்துவிடும். அதேபோல இவரிடம் இருந்து பணத்தை வாங்கி துபாய் உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்களும் அமலாக்கத்துறையிடம் கிடைத்துள்ளது. இதை தவிர டாஸ்மாக், மணல் கடத்தல், கனிமவள கடத்தல், பல்வேறு அமைச்சர்கள் காட்டிக்கொடுத்த பணம் என பல ஆயிரம் கோடி பணமும் இந்த முக்கிய பிரமுகர் மூலம்தான் வெளிநாடுகளில் முதலீடாகவும், அங்கிருந்து தமிழகத்திற்கே முதலீடாக வந்துள்ளதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. எனவே வரும் ஜனவரி மாதம் முதல் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து மேலிட முக்கிய பிரமுகரை கைதுசெய்ய வலை விரித்து விட்டனர்.

பாஜக மேலிடம் குடும்பத்தின் வருங்கால வரிசையும் விட்டுவைக்க விரும்பவில்லை. இவர்கள் இருவரையும் கைது செய்வதோடு, நடந்த ஊழல்களை பத்திரிக்கைகள், டி.வி.க்கள் மூலம் லீக் செய்து ஒட்டுமொத்தமாக கட்சி இமேஜ் மற்றும் மேலிட உறுப்பினர்களின் ஒட்டுமொத்த இமேஜையும் காலிசெய்ய மத்திய மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம். கடந்த முறை அமைச்சர் நேரு சிக்கியபோது பாஜக மேலிடமே தமிழகத்தின் தலைவராக இருந்தவர் மூலம் காப்பாற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இம்முறை இந்த அமைச்சர் மூலம் மேலிடத்தை கைதுசெய்ய அணைத்து ஆதாரங்களும் உள்ளதால் ஒட்டுமொத்தமாக காலிசெய்ய தயாராகிவிட்டதாம் பாஜக மேலிடம். இதனால் மேலிட குடும்பத்தார் ஒட்டுமொத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

இதை தவிர திருப்பரங்குன்ற விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துள்ளதால் இதையும் பெரிதாக்கி திமுகவின் இந்து ஒட்டு வங்கியை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட வேண்டும் என்றும் மத்திய பாஜக தலைவர்கள் திட்டம் வகுத்து கொடுத்துள்ளனர். இதுவும் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாரங்கள்.

Comments (0)
Add Comment