தமி­ழ­க போலீசை கல­க­லக்க வைத்த டிஎஸ்பி சுந்­த­ரே­சன்: நடந்­தது இது­தான்

– சிவ. செல்­லை­யா –

தனக்கு ஒதுக்கப்பட்ட ஜீப்பை பந்தோபஸ்துக்கு அனுப்ப வேண்டும் என கூறி எடுத்துக் கொண்டு மீண்டும் வழங்க மறுத்ததால் நடந்தே அலுவலகத்திற்கு செல்வதாகவும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோர் தன்னை துன்புறுத்துவதாகவும் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் மத்திய மண்டல ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்துள்ளார்.

கமி­ஷனர் அரு­ணுக்கு சம்மன் அனுப்­பி­ய சுந்­த­ர­சேன்

சென்னை மனித உரிமை ஆணையத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் சுந்தரேசன். இவர் சில வழக்குகளில் விசாரணைக்காக சென்னை மாநகர ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சம்மன் அனுப்பினார். இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உட­ன­டி­யாக வந்த டிரான்ஸ்பர் உத்­த­ர­வு

மனித உரிமை ஆணையத்திற்கு வந்த மனுவிற்காக உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியதால் டி.எஸ்.பி. சுந்தரேசனை உடனடியாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. பதவிக்கு இடம் மற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மனித உரிமை ஆணைய தலைவரும், நீதிபதியுமான மணிகுமார் உத்தரவு இல்லாமல் தான் வேறு இடத்திற்கு செல்ல முடியாது என டி.எஸ்.பி. சுந்தரேசன் மறுத்­தார்.

நீதி­ப­தி­யிடம் ராஜி­னாமா கடி­தம்

உடனடியாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவில் சேரும்படி தன்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்­வா­தம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகியோர் மிரட்டுவதால் விருப்ப ஓய்வில் செல்லப் போவதாக கூறி ராஜினாமா கடிதத்தை டிஎஸ்பி சுந்தரேசன் நீதிபதியிடம் கொடுத்து தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் பின்னர் ஒருவழியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே 24-ம் தேதியன்று மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவில் சேர்ந்தார்.

வாக­னத்தை பறித்­த­னர்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டில் இருந்து மயிலாடுதுறையில் உள்ள மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சீருடையுடன் நடந்து சென்றார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பான நிலையில் பத்திரிகை மற்றும் டி.வி.க்களுக்கு அளித்த பேட்டியில் தனக்கு அளிக்கப்பட்ட காவல்துறை வாகனத்தை அமைச்சர் மெய்ய நாதன் விழாவில் பாதுகாப்பு பணிக்கு தேவை என கூறி எடுத்துக்கொண்டனர். இதைப்பற்றி கேட்டதும் தனக்கு வெளியூரில் பந்தோபஸ்து டூட்டி கொடுத்தனர் என டிஎஸ்பி சுந்­த­ரசேன் குற்றம் சாட்­டி­னார்.

அலு­வ­ல­கத்­துக்கு நடந்­தே சென்­றார்

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் டூட்டி முடிந்து வந்த பிறகு தனக்கு மிகவும் பழைய ஜீப்பை கொடுத்ததால் திருப்பி அனுப்பிவிட்டு கடந்த ஒரு வாரமாக நடந்தே அலுவலகம் செல்வதாக பேட்டியளித்து தமிழக காவல்துறையில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தினார். தன்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா­சீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் இருவரும் பழிவாங்கும் வகையிலும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிரட்டி வருகின்றனர். முறைகேடாக செயல்பட்ட டாஸ்மாக் பார்களை மூடியதால் மாவட்ட எஸ்.பி. பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறார்.

சுந்­த­ர­சே­ன் உயி­ருக்கு ஆபத்­து?

தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியது காவல்துறையில் பெரிய புயலையே கிளப்பி விட்டது என்றே கூறலாம். முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் இதுவரை உயர் அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஒரு அதிகாரியும் டி.வி., பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தது இல்லை. அதுவும் மாநில அளவில் உயர் பதவியில் உள்ள சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மாநில உளவுத்துறை ஐ.ஜி. மீது டி.எஸ் .பி. சுந்தரேசன் கூறிய குற்றசாட்டுகள் மிகவும் கடுமையானவையாகும். உயர் அதிகாரிகள் மீது நேரடியாக கடுமையான குற்றசாட்டை டி.எஸ்.பி. கூறியதால் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்ததில் உயிரிழந்த சம்பவம், அவரை போலீசார் தாக்கும் வீடியோவும் வெளியாகி தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இந்த சம்பவத்தில் காவல் துறை உயர் அதிகாரி உத்தரவில்தான் தனிப்படையினர் கடுமையாக தாக்கியதாக குற்றசாட்டு எழுந்து அந்த அதிகாரி யார்? என்ற பெரிய கேள்வி எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றும் அதிகாரியே தன்னை உயர் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தனது உயிருக்கே ஆபத்து எனவும் வெளிப்படையாக புகார் கூறிய சம்பவம் காவல்துறை வரலாற்றில் பெரும் புயலையும், பூகம்பத்தையும் ஒருசேர ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.

அறிக்­கை அனுப்­பிய டிஐ­ஜி

இந்த சம்பவம் குறித்து அறிக்கை அனுப்பும்படி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக்கிற்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.யின். ஜீப் வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்காக எடுக்கப்பட்டது. வேறு வாகனம் வழங்கிய பிறகும் வேண்டுமென்றே நடந்து சென்றதுடன், இதை வீடியோ படமெடுக்க பத்திரிகை நிருபருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சுந்­த­ரேசன் மீது ஏற்­க­னவே இருந்த புகார் மனுக்­கள்

இந்த வீடியோ வெளியானதும் மாவட்ட எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளில் தன்னை பழிவாங்குவதாக பேட்டி அளித்துள்ளார். இது காவல்துறை நடைமுறை சட்டப்படி குற்றமாகும். மேலும் கள்ளத்தனமாக மதுவிற்ற வழக்கில் கைதான நபரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்ததால் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் அன்னை அபிராமியை, டிஎஸ்பி சுந்­த­ரேசன் மிகவும் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆய்வாளர் அபிராமி கூறியதால் அவரை சக போலீசார் சமாதானப்படுத்தி உள்ளகள் இதேபோல சீர்காழி மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயாவையும் டிஎஸ்பி சுந்­த­ரசேன் மிரட்டியதாக அவர் ஏற்கனவே ஐ.ஜி.க்கு புகார் அளித்துள்ளார். சுந்­த­ரேசன் தனக்கு கீழே பணியாற்றும் போலீசாரை தரக்குறைவாக திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

காவல்துறை நன்னடத்தை சட்டத்திற்கு மாறாக உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேட்டியளித்திருப்பதால் நன்னடத்தை விதிப்படி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அறிக்கையில் டி.ஐ.ஜி. ஜியா உல் ஹக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

உயர் அதி­கா­ரி­களை எதிர்த்தால் இதுதான் நடக்­கும்

சுந்­த­ரசேன் மீது ஏற்கனவே குற்றசாட்டு கூறி இருந்ததால் டிஜிபிக்கு பரிந்துரைத்து இ­ட­மாற்றம் செய்திருக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு எதிராக பேட்டியளித்தார் என்பதற்காக அவருக்கு கீழே வேலை செய்யும் பெண் ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்திருப்பதன் மூலம் உயர் அதிகாரிகளை எதிர்த்தால் இப்படித்தான் நடக்கும் என மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இது.

கட்டுப்­பாடு இல்­லாத காவல்­து­றை

தமிழக காவல்துறை மீது இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களும், புகார்களும் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருப்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

மறு­சீ­ர­மைக்­கப்­ப­டுமா காவல்­­துறை

ஏற்கனவே சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கூட உயர் அதிகாரிகளிடையே கோஷ்டி பூசல்கள் இருப்பதாக முதல்வரே நேரடியாக குற்றம் சாட்டியும் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் தற்போது வெளியே வந்துவிட்டது. காவல்துறையை முதல்வர் உடனடியாக மறுசீரமைக்காவிட்டால் ஆட்சிக்கு அவப்பெயரையும், சிக்கலையும் ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நேர்மையான காவல் அதிகாரிகள். முதல்வர் காதுக்கு செல்லுமா இந்த புகார்கள்…

watch you tube link here

 

Comments (0)
Add Comment