25 ஆண்டாகியும் பதவி உயர்வு இல்லை: நேரடி சப் இன்ஸ்பெக்டர்கள் வேதனை

சிவ. செல்லையா –

தமிழக காவல் துறையில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகியும் தவறு செய்தவர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கிவிட்டு கோர்ட்டில் வழக்கு தாமதமாக தொடர்ந்ததாக காரணம் கூறி எந்த பதவி உயர்வு மட்டுமின்றி சீனியரிட்டி கூட வழங்காமல் இழுத்தடித்து எந்த பதவி உயர்வும் இன்றி ஒய்வு பெரும் அவலம் தமிழக காவல்துறையில் தொடர்கிறது.

தமிழக காவல் துறையில் கடந்த 1999 -ம் ஆண்டு நேரடியாக 1000 சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு காவலர் சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப மனு கொடுத்தனர். தேர்வு அறிவிப்பின் பொது தற்போதாய திமுக ஆட்சிதான் இருந்தது.

பொதுவாக தமிழ் நாடு காவலர் தேர்வாணைய உத்தரவின்படி மாநிலம் தன்மையை கட் ஆப்  மார்க் மூலம்தான் காவலர் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது அரசாணை. ஆனால் அதிகரித்தல் சரக வாரியாக கட் ஆப் மார்க் நிர்ணயம் செய்து முத்த குழப்பத்தை தொடங்கி வைத்தனர். இதன்படி சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தேர்வு எழுதிய மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு 76 மார்க் கட் ஆப் மார்க் எனவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவருக்கு 52 கட் ஆப் மார்க் எனவும் நிர்ணயம் செய்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 பிரிவாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் 500 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் சீனியாரிட்டி வைத்து கட் ஆப் மார்க் வைக்காமல் சரக அடிப்படையில் வைத்தது தவறு என கூறி ட்ரிபியூனல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது சென்னை ஐகோர்ட் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதில் சரக வாரியாக கட் ஆப் மார்க் வைத்தது தவறு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே உடற்தகுதி உள்ளிட்ட தேர்வுக்கு பிறகு நடந்த நேர்முக தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தேர்வு கமிட்டி உறுப்பினர்கள்  முறைகேட்டில் ஈடுபட்டதால் குறைவான மார்க்குகள் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2002 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 -ம் தேதி முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என கூறி அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்த ஐ.ஜி.க்கள் ஜெகநாதன், சுப்பையா , டிஐஜி இளங்கோவன் மற்றும் தெரிவுக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ததால் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேர்முக தேர்வில் வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்தவர்களாகவும், தோல்வி பெற்றவர்கள் வெற்றிபெற்றதாகவும் மார்க்குகளைக் குறைத்தும், கூட்டியும் முறைகேடு நடந்ததும் உறுதியானது. இதையடுத்து முழு பட்டியலையும் ஆய்வு செய்து முறையாக வெற்றி பெற்றவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர்கள் வேலை வழங்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேர்வில் முறைகேடு செய்து ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசு வழக்கு தொடர்ந்து தவறு செய்து பணியில் சேர்ந்தவர்களை பணியில் தொடர அனுமதித்தது.

இதற்கிடையே 2002 -ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2003 -ம் ஆண்டு ஜூலை மாதம் வரை வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என 2005 ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட் உத்தரவில் கூறி இந்த குறிப்பிட்ட ஆண்டில் வழக்கு தொடராது தகுதி டயர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்படி வழக்கு தொடர்ந்த 49 பேருக்கு பணி வழங்க பட்டது. ஆனால் வழக்கு தொடர தாமதமானதை காரணம் காட்டி ஐகோர்ட் பணி வழங்க மறுத்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட 77 பேர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2007 -ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் பயிற்சியில் சேர்ந்த 49 பேரும் பயிற்சியை முடித்து பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் பெற்றுவிட்டனர்.

காலதாமதம் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டவர்கள் அனைவருமே காவலர்களாக பணியில் சேர்ந்து 20 சதவிகித கோட்டாவில் சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் பங்கேற்றவர்கள். இந்த வழக்கு 2014 -ம் ஆண்டு தான் விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களின் சீனியாரிட்டி வழங்காமல் புதிய சீனியாரிட்டி அடிப்படையில் 77 பேருக்கும் சப் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கலாம் என உச்ச கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இவர்களுக்கு 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் வண்டலூரில் பயிற்சி அளித்து உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தனர். தாங்கள் 1999 -ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர்களாக தேர்வு எழுதி வெற்றிபெற்ற பிறகும் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக கூறி 2018 -ம் ஆண்டு வேலை வழங்கியதோடு சீனியாரிட்டியிலும் பின்தங்கியது தவறு என கூறி 77 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. டிஜிபி அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டாததால் தேர்வு எழுதி வெற்றி பெற்று 25 ஆண்டுகளாகியும் இன்னும் சப் இன்ஸ்பெக்டர்களாகவே கருதப்பட்டு எந்த பதவி உயர்வும் இன்றி பணியாற்றி வருகின்றனர்.

காவலர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த நாளை சீனியாரிட்டியாக கொள்ளாமல் தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்கியது தவறு என ஆய்வாளர் ரஞ்சித் என்பவர்  உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த மே மாதம் முதல் தேதியில் வழங்கிய தீர்ப்பில் பயிற்சியில் சேர்ந்த நாள் அடிப்படையில்தான் சீனியாரிட்டி வழங்க வேண்டும் எனவும் இதை 1996 -ம் ஆண்டு முதல் கணக்கில் எடுத்து சீனியாரிட்டி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவை வழங்கியது. இதனால் தேர்வில் அதிக மார்க்குகள் எடுத்து பயிற்சியில் தாமதமாக சேர்ந்தும் பதவி உயர்வு பெற்ற பல அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் பேரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் 1999 -ம் ஆண்டு தேர்வு எழுதி அதிக மார்க்குகள் பெற்றும் வழக்கு நிலுவையில் இருப்பதால் 25 ஆண்டுகளாகவே சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் தங்களின் பரிதாபத்தையும் அரசும், தமிழக டிஜிபியும் கருணையோடு பரிசீலித்து வழக்கை விரைந்து முடித்து தங்களுக்கும் உரிய பதவி உயர்வை வழங்க வேண்டும். ஏற்கனவே காவலர்களாக பணியாற்றி வயது கடந்து சப் இன்ஸ்பெக்டர்களாக தேர்வும் செய்யப்பட்டதால் ஓய்வு பெற சில ஆண்டுகளே உள்ளது. சிலர் பதவி ஓய்வும் பெற்றுவிட்டனர். விரைவாக வழக்கை முடித்து தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட 77 உதவி ஆய்வாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் வேண்டுகோள்.

Comments (0)
Add Comment