டிஜிபி நிய­ம­னம்…! அதிர்ச்­சியில் ஐபிஎஸ் அதி­கா­ரி­கள்

சிவ.செல்­லை­யா

தமிழக காவல்துறையில் எதிர்பாராத திருப்பமாக சட்டம் ஒழுங்கு டிஜிபிசங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் மேலும் 6 மாதம் பணி நீடிப்பு வழங்குவதற்கான பைலில் முதல்வர் ஒப்புதல் வழங்கி உரிய அனுமதிக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது டிஜிபி பதவிக்காக எதிர்பார்த்திருந்த மற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இலவு காத்த கிளியைப் போல ஏமாற்றம் மற்றும் கடும் அதிர்ச்சிக்குள்­ளாக்க வைத்­துள்­ள­து.

சைலேந்திரபாபு

தமிழக காவல்துறை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திரபாபு கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக டிஜிபி பதவியில் சீனியாரிட்டியில் இருந்த டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்டோரைவிட ஜூனியரான சங்கர்ஜிவாலுக்கு ஆளும் கட்சி மேலிட ஆதரவு மிகவும் பலமாகவே இருந்தது. அத­னால், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்­கர்­ஜிவால், அதி­முக்­கியம் வாய்ந்த பத­வி­யான தமிழ்­நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

  சஞ்சய் அரோரா                       ஏ கே விஸ்­வ­நா­தன்                                சீமா அகர்வால்

சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் பணியாற்றியதை தவிர வேறு பொறுப்பில் சட்டம் ஒழுங்கு பொறுப்பை நேரடியாக கையாளாவிட்டாலும் சங்கர்­ஜிவால் உளவுத்துறையில் மிகுந்த முன் அனுபவம் பெற்றதோடு நவீன தொழில் நுட்பக் கருவிகளை கையாள்வதில் மிகவும் திறமைசாலி மற்றும் சட்டம் ஒழுங்கு பதவியை சிறப்பாக கையாள்வார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

வெங்­கட்­ராமன்                                   அபய்­குமார் சிங்                                சந்­தீப்ராய் ரத்­தோர்

ஆனால் மாநகர ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், டிஐஜிக்கள் வரை ஒவ்வொரு அதிகாரியும் மேலிடத்தில் அதிகார மையங்களாக இருப்பவர்களோடு கைகோர்த்துக் கொண்டு டிஜிபியின் கருத்தைக்கூட பல நேரங்களில் அலட்­சி­யப்­ப­டுத்தி நிரா­க­ரித்­த­னர். இதனால் டிஜிபி மீதான பயம் இல்லாமல் பவர் செண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அதிகாரிகள் பணியாற்றத் தொடங்கி விட்டனர். இதனால் அதிகாரிகளை விரட்டி வேலை வாங்க முடியாமல் வெறுமனே நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு டிஜிபி சங்கர் ஜிவால் மெயில் அனுப்புவதும், அதிகாரிகள் பேருக்கு கடிதம் எழுதுவதுப் வெறும் சம்பிரதாயம் ஆகிவிட்டதாக குமுறுகின்றனர் நேர்மையான அதிகாரிகள்.

சில சரக அதிகாரிகள் சம்பிரதாயத்திற்கு கூட டிஜிபியின் உத்தரவை கண்டுகொள்ளாமல் அதிகார வர்க்கத்தினரோடு நெருக்கமான அதிகாரிகள் உத்தரவை நேரடியாக பெற்று சிரமேற்று செய்த சம்பவங்களும், இதனால் ஏற்பட்ட பல தர்ம சங்கட சம்வங்களை டிஜிபி சந்தித்த சம்பவங்களும் உண்டு. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற வேண்டும். ஜூன் மாதத்தோடு ஓய்வு பெற வேண்டியவருக்கு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதால் கூடுதலாக 2 மாதம் வழங்கி 2 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் புதிய டிஜிபிக்கான பேனல் பட்டியலை டிஜிபி அலுவலகம் தயார் செய்து மத்திய பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் மத்திய உள்துறைக்கு அனுப்ப வேண்டும்.

அந்த வகையில் இந்த பட்டியலில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அக்ரவால், போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப்ராய் ரத்தோர், ரயில்வே டிஜிபி வன்னியப்பெருமாள், நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் உள்ளிட்ட 8 டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் பெயர்களும் இருந்தன. ஆனால் சீனியாரிட்டி பட்டியல் மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறைக்கு அனுப்பப்படவில்லை.

இதுபற்றி டிஜிபி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் சொன்ன திடுக்கிடும் திருப்புமு­னைச் செய்தி கேட்கும் திகைப்­ப­டையச் செய்­த­து. புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்குப் பதிலாக தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கே கூடுதலாக 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க மேலிடம் விரும்புவதால் பதவி நீடிப்பிற்கான பைல் தயார் செய்யப்பட்டு ரகசியமாக உள்துறை, தலைமைச் செயலாளர் மூலமாக முதல்வருக்கு 15 நாட்களுக்கு முன்பே அனுப்பி முதல்வர் ஒப்புதலையும் பெற்றுவிட்டதாக கிடைத்த தகவல்தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

ஏற்கனவே சங்கர் ஜிவாலுக்கு 2 மாதங்கள் கூடுதலாக வழங்கப்பட்டிருப்பதால் வரும் டிசம்பர் மாதம் வரை இந்த பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், முதல்வர் ஒப்புதலுக்குப் பிறகு மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய உள்துறை அனுமதி பெற்று டிசம்பர் மாதம் வரை டிஜிபியாக சங்கர் ஜிவாலே தொடர்வார் என்பதும் தற்போது உறுயாகியுள்ளது. இத்தகவல் வெளியானதால் டிஜிபி கனவில் இருந்த மூத்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தரும் வகையில் மற்றொரு முக்கிய தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அதாவது வரும் ஜனவரி மாதம் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றாலும் புதிய டிஜிபியாக தற்போது சீனியர்களாக உள்ள யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. இதற்குப் பதிலாக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜியாக தற்போது பணியாற்றும் டேவிட்சன் ஆசீர்வாதம் ஐனவரி 1-ம் தேதி முதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற உள்ளார்.

இவரையே புதிய சட்டம் -ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்க மேலிடம் முடிவெடுத்திருப்பதாக வந்த தகவல்தான் மற்றொரு சர்ப்ரைஸ். காரணம் வரும் 2026 மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் வர உள்ளதால் தங்களுக்கு தோதான டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது மேலிட விருப்பம். இவர்களது முதல் சாய்ஸ் டேவிட்சன்தான் என­வும், எனவேதான் சிறப்பு டிஜிபியாக அவ­ரையே நியமிக்க மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கிசுகிசுக்கிறது டிஜிபி அலு­வல­க வட்டாரங்கள்.

திரிபாதி

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு டிஜியாக திரிபாதி நியமிக்கப்பட்ட பிறகு கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பதவியில் இருந்த ராஜேஸ்தாஸுக்கு டிஜிபி பதவி உயர்வோடு ஸ்பெஷல் டிஜிபி பதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பதவி கிடைத்ததும் டிஜிபி திரிபாதியுடன் இணைந்து செயல்படாமல் தனி ஆவர்த்தனம் செய்து பல அதிரடி உத்தரவுகளை தானே பிறப்பித்து செய்திக்குறிப்பு வெளிடச் செய்து திரிபாதிக்கு பெரும் தர்ம சங்கடத்தையும் உருவாக்கினார் ராஜேஸ்தாஸ்.

ராஜேஸ்தாஸ்.

ஆனால் ஓடும் காரில் பெண் எஸ்பியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சக பெண் அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கண்ணீர் விட்ட தகவலை அறிந்த டிஜிபி திரிபாதி ராஜேஸ் தாசை மாட்டிவிட இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என கருதி பெண் அதிகாரியிடம் நேரடியாக பேசி சென்னைக்கு வரவழைத்து புகார் மனுவைப் பெற்று அந்த தகவலை பத்திரிகைகளுக்கும் கசியவிட்டார். அவர் நினைத்தபடியே பிரச்னை பெரும் பூகம்பமாக வெடித்து வேறு வழியின்றி ராஜேஷ்தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டேவி­ட்சன் தேவா­சீர்­வா­தம்

இந்த சூழ்நிலையில் சிறப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவா­சீர்­­வா­தத்தை நியமித்து தேர்தலை சந்திக்க மேலிடம் திட்டமிடும் நிலையில் இதை எதிர்த்து யாரேனும் நீதிமன்றத்திற்குச் சென்றால் அரசு தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடும் என்கின்றனர் டிஜிபி அலுவலக அதிகாரிகள்… எது எப்படி இருந்தாலும் ஒருசிலரது டிஜிபி கனவு கானல் நீராகும் நிலையே தென்படுவதாக டிஜிபி அலுவலகத்திலும், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியிலும் முனு­மு­னு­­க்­கப்­­ப­டும் பெரிய ஹாட் டாபிக் இதுதான். மேலும் சங்கர் ஜிவாலுக்கு மத்­திய அரசின் பதவி நீடிப்பு கிடைக்குமா என்ற சஸ்பென்சும் நீடித்து வருகிறது.

 

Comments (0)
Add Comment