கொரோனா தொற்று நோய் 2019 ஆ-ம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியது.
இதில் மத்திய அரசும், மாநில அரசும் பெரி மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி கோவிஷீல்டு போன்ற தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா மீண்டும் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்திருந்ததது.