குரூப்ஒன் தேர்­வில் வெற்றி பெற்­று டிஎ­ஸ்பி ஆன இன்ஸ்­பெக்டர்: கமி­­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்­பெக்­ட­ராக பணிபுரிந்து கொண்டே குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்­பி­யாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்­வாளரை கமி­ஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்­பெக்­ட­ராக பணி­பு­ரிந்து வரு­பவர் ராமலிங்கம். 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியக் குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் பணிபுரிந்து 2025ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பதவி உயர் பெற்றார். இந்­நி­லை­யில் துறை அனுமதியுடன் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஎஸ்பி பதவிக்கு தேர்வு பெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.

காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு, தொடர்ச்சியாக ஊக்கத்துடன் பல்வேறு உயர் பதவிகளுக்கான அரசு தேர்வுகளில் பலமுறை கலந்து கொண்டவர் ராம­லிங்கம், தனது அய­ராத உழைப்பால் தமி­ழக காவல்­து­றையில் டிஎஸ்பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமை சேர்த்­துள்­ளது.  07.09.2025 முதல் டிஎஸ்பி பணிக்கான பயிற்சிக்கு செல்ல உள்ளார். அவ­ரது திற­மையை மெச்­சிய சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண், இன்று ராமலிங்கத்தை தனது அலு­வ­ல­கத்­துக்கு நேரில் வர­வ­ழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உடனிருந்தார்.

Comments (0)
Add Comment