நகைக்­க­டையில் 4 கிராம் தங்­க­மோ­தி­ரத்தை திருடிய பலே பெண் கைது

204

சென்னை, கொருக்குப்பேட்டையில் நகை கடையிலிருந்து தங்க மோதிரத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீ­சார் கைது செய்­து 4 கிராம் தங்க மோதிரத்­தை மீட்­ட­னர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அரிஹந்த் (34) கடந்த 7 வருடங்களாக பழைய, வண்ணாரப்பேட்டை, T.H சாலையில் தங்க நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19.05.2025 அன்று காலை, நகை வாங்குவதற்காக வந்த பெண் ஒருவர், தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பார்த்துவிட்டு, எதுவும் பிடிக்கவில்லை என்று கடையிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் கடையிலிருந்த தங்கநகைகளை சரிபார்த்தபோது, அந்­தப் பெண் 4 கிராம் எடையுள்ள ஒரு தங்கமோதிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அரிஹந்த் தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் நகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி­சி­டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வண்­ணா­ரப்­பேட்டை சின்­ன­தம்பி தெருவைச் சேர்ந்த ராணி (47) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி நகை கடையிலிருந்து திருடப்பட்ட 4 கிராம் எடையுள்ள ஒரு தங்க மோதிரம் மீட்கப்பட்டது. ராணி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.