டிஜிபி பதவிக்கு தொடங்­கி­யது ஐபிஎஸ் அதிகாரிகளின் பரமபத ஆட்டம்

341

சென்­னை, மே– 23.2025

தமிழக அரசின் நிர்வாகத்தை வழிநடத்துவதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பே மிகவும் இன்றிமையாதது. நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை என்ற சூழ்நிலை மாறி தங்களின் கண்ணசைவிற்கேற்ப செயல்படும் அதிகாரிகளையே ஆட்சியாளர்கள் விரும்பும் காலம் இது.

சீமா அகர்வால்                            அப­ய்குமார் சிங்                             வெங்­க­ட்­ரா­ம­ன்

இதனால் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்று முக்கிய பதவியைப்பெற எதற்கும் தயார் என்ற மனநிலைக்கு பெரும்­பா­லான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தள்ளப்பட்டு விட்டனர். இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வு, தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகளைப் பெற முழு ஒற்றுமையுடன் இருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தங்களுக்கு எந்த பிரச்னையும் வராமல் காப்பாற்றிக் கொள்வதில் கில்லாடிகள்.

  வினி­த் தேவ் வாங்­க­டே          சஞ்ச­ய் மாத்­தூ­ர்                  வன்­னி­ய­ப் பெரு­மா­ள்

ஆனால் ஐபிஎஸ் அதிகாரிகள் நிலையோ நேர்மாறாகிவிட்டது. தங்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கிறதோ இல்லையோ தங்களுக்கு வேண்டாத அதிகாரிகள் முக்கிய பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உஷாராகவே உள்ளனர். இவர்களது இந்த போட்டி மனப்பான்மை காரணமாக ஒருவரைப் பற்றி மற்றொருவர் தங்களுக்கு வேண்டப்பட்ட மீடியா நண்பர்கள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட வைப்பது, பொய்யான தகவல்களை பரப்பும் தவறான செயலில் சில சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதுதான் வேதனையான விஷயம்…

குறிப்பாக தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி., சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்ட பதவிகளைப் பிடிப்பதில் ஐபிஎஸ் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள போட்டி பொறாமையாகி உச்சகட்டத்திற்றே சென்று விட்டது.

தற்போதைய ஹாட் டாபிக் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கைப்பற்றப் போவது யார் என்பதுதான். தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். இப்பதவிக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பது தமிழக காவல்துறை போலீஸ் அகாடமி இயக்குனராக உள்ள சந்தீப் ராய் ரத்தோர் தான். இவருக்கு வரும் 2028-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை பதவிக்காலம் இருப்பதால் டிஜிபி பதவியை கைப்பற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கருதப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்து மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப் போவதாக பரபரப்பு தகவல் கிளம்பியது. இவருக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பணியாற்றும் அபய்குமார் சிங்கை பொறுப்பு பதவி கொடுத்து பின்னர் 2 ஆண்டுகாலம் டிஜி­பி­யாக பதவி வழங்குவதாக பரபரப்பு தகவல் நிலவியது. ஆனால் சங்கர் ஜிவால் மாற்றப்படவில்லை. மேலும் அபய்குமார் சிங் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வுபெற உள்ளதால் வாய்ப்பில்லை என்றானது. திடீரென தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு 6 மாத காலம் பதவி நீடிப்பு வழங்கப்பட உள்ளதாக மீண்டும் பரவிய தகவல் காவல்துறை வட்டாரத்தை பரபரப்பாக்கிவிட்டது. டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு நெருக்கமான சிலர்தான் இந்த பரபரப்பிற்கு காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளதக கூறப்­ப­டு­கி­றது.

ஆனால் ஐபிஎஸ் பதவி உயர்வு தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பில் டிஜிபி பதவி வகிப்போருக்கு எக்காரணம் கொண்டும் மீண்டும் பதவி நீடிப்பு வழங்கக்கூடாது என தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால் இதற்கும் வாய்ப்பில்லை என்றாகி விட்டது. இதனால் சந்தீப்ராய் ரத்தோர் அடுத்த டிஜிபி ஆவதில் எந்த பிரச்னையும் இல்லை  என கூறப்பட்ட நிலையில் அவரையும் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் தந்திரமாக ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் காய் நகர்த்த தொடங்கிவிட்டதாக கிசுகிசுக்கின்றனர்.

சென்னை மாநகரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைச் சம்­ப­வத்தின் எதிரொலியாகவே சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டதால், இவருக்கு பதிலாக வேறு சீனியர் அதிகாரியை தமி­ழக சட்டம் ஒழுங்கு டிஜி­பி­யாக நியமிக்க வேண்டும் என தங்களுக்கு வேண்டப்பட்ட மேலிட அதிகாரிகள் மூலம் சந்தீப்ராய் ரத்தோருக்­கு எதிர் தரப்பு நெருக்கடி தந்து வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் டிஜி­பிபி பதவி ரேசுக்கான சீனியாரிட்டி பட்டியலில் தீயணைப்புதுறை டிஜிபி சீமா அக்ரவால், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், சைலேஸ்குமார் யாதவ், வெங்கட்ராமன், வினித்தேவ் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 5 பேர் பட்டியல் யுபிஎஸ்சி மூலம் பெற்று பின்னர் இறுதியாக 2 அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்படும். இதில் ஆளும் கட்சி மேலிடம் விரும்புபவரே புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவார்… அனேகமாக சந்தீப்ராய் ரத்தோர் இந்த ரேஸில் முந்திச் செல்வதாக கிசுகிசுக்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.

சிவ.செல்லையா