ராமா­பு­ரத்தில் 405 போதை மாத்­தி­ரைகள் பறி­மு­தல்: இருவர் கைது

190
 சென்னை, ராமாபுரத்தில் சட்டவிரோதமாக 405 உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்­தனர்.
சென்னை ராமாபுரம், பெரியார் சாலை, வ.உ.சி தெரு சந்திப்பு அருகே ராமா­புரம் போலீசார் ரக­சி­ய­மா­க கண்காணித்த போது அங்கு உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ராமா­புரம், பெரியார் சாலையைச் சேர்ந்த ரூபன் குமார் (27), மூகாம்­பிகை நகரைச் சேர்ந்த பிரபு (29) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து Tydol, Tabedac, Aspadol,  Talpidol, Topcynta ஆகிய 405 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1   செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டன.ரூபன்குமார் மீது 5 வழக்குகளும்,  பிரபு  மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர்   நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.