நாகூர் தர்­கா ­அ­தி­சய ஐம்பொன் சங்கி­லியின் மகத்­து­வம்… குழந்­தை பாக்­கியம் தரும் ­அ­பூர்வ வெற்­­றி­லை…

தென்­னிந்­தி­யாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்­மி­கத் தலங்­களில் ஒன்­று நாகை மாவட்­டம் நாகூரில் கட­லோரம் அமைந்­துள்ள நாகூர் ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப். அதி­ச­யங்­களும், அற்­­பு­தங்­களும் நிறைந்த புனித மிகுந்த இட­மாக கரு­தப்­படும் நாகூர் தர்­கா­வுக்கு தினந்­தோறும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஜாதி, மத, பேத­மின்றி இங்கு வந்து தங்கள் வேண்­டு­தல்­களை நிறை­வேற்றிச் செல்­கின்­றனர்.

நாகூர் தர்கா ஷரீப்பில் ஜீவ­ச­மாதி அடைந்­துள்ள நாகூர் மக்­க­ளால் “எஜமான்” என அன்­புடன் அழைக்கப்­படும் செய்­ய­து­னா ஷாகுல் ஹமீது காதிர் வலி என்னும் நாகூர் ஆண்­ட­வர்களின் புனித நினை­வி­டத்­துக்கு குறை­க­ளுடன் செல்­ப­வர்­கள் அங்­கி­ருந்து திரும்பும் போது சிரித்த முகத்­துடன் செல்­வதை பார்க்க முடி­கி­றது என்­கின்­றனர் அங்கு வாடிக்­கை­யாக வந்து செல்லும் பக்­தர்கள்.

செய்­­வி­னைகளுக்கு 40 நாட்­களில் தீர்­வு

நாகூர் ஆண்­ட­வர்கள் தர்­கா­வுக்கு சென்றால் செய்­வினை, பில்லி, சூனியம், ஏவ­ல், பேய் பிசா­சு­களால் ஏற்­படும் தொல்­லை­களில் இருந்து குறைந்த பட்சம் ௪௦ நாட்­களில் தீர்வு கிடைப்ப­தாக நம்­பு­கின்­றனர்.

குழந்தை பாக்­கியம் தரும் அதி­சய வெற்­றி­லை

இன்­னொரு முக்­கி­ய­மான அதி­சயம் ஒன்று நாகூர் தர்­­கா­வுக்­குள் அமை­தி­யாக நடந்­தே­று­கி­றது. குழந்­தை­யில்­லாத தம்­ப­திகள் நாகூர் தர்கா சென்று மன­மு­றுகி பிரார்த்­தனை செய்தால், இறைவன் அருளால் குழந்தைப் பேறு கி­டைக்­கி­றது என்­பதுதான் அது. நாகூர் ஆண்­ட­வர்கள் ஷாகுல் ஹமீ­து ஜீவசமா­திக்கு வெளிப்­புறம் இடப்பக்கம் அ­வர்­க­ளது மரு­மகளார் சுல்தான் பீவி அம்மா அடக்­கத்­த­லம் உள்­ளது. அங்கு தரும் வெற்­றி­லையை குழந்­தை­யில்­லாத தம்­ப­தி மன­தார வேண்டிக் கொண்டு சாப்­பிட்டால் நிச்­சயம் குழந்தை பாக்­கியம் கிட்டும் என்­கின்­றனர் அந்த பாக்­கி­யத்தை பெற்­ற­வர்­கள்.

அதிசய ஐம்பொன் சங்­கி­லி

மற்­­று­மொரு அதி­சயம் உடலில் உள்ள தீராத நோய்­களை தீர்க்கும் அதி­சய குடிநீர் நாகூர் தர்­காவில் ­மி­கப்­பெ­ரிய பொக்­கி­ஷ­மாக விளங்­கு­கி­றது. நாகூர் அருகில் வாஞ்சூர் என்ற இடத்தில் நாகூர் ஆண்­ட­வர்கள் ஐம்பொன் சங்கி­லியை உடம்பில் அணிந்து கொண்டு இறை­வனை நினைத்து மாதக்­க­ணக்கில் தவம் மேற்­கொண்­டார்­கள். அந்த சங்­கிலி தற்­போது நாகூரில் பெரிய பொக்­கி­ஷ­மாக கரு­தப்­ப­டு­கி­றது. நாகூர் ஆண்­­ட­வர்­களின் மகனார் சின்ன எஜமான் என அழைக்­கப்­படும் தாதா யூசுப் சாஹிப் சமா­திக்கு எதிரில் மேற்­கூ­ரை­­யில் நாகூர் எஜ­மானின் ஐம்­பொன் சங்­கி­லி கட்­டப்­பட்­டுள்­ளது.

தீராத நோய்கள் தீரும்

அந்த சங்கி­லியில் நனைத்த நீரை பருகினால் உடலில் உள்ள தீராத நோய்கள் தீரும் என்றும், பாவ தோஷங்கள் விலகி மகிழ்ச்­சி­யான வாழ்வு உண்­டாகும் என்ற நம்­பி­க்­கையும் உள்­ளது. மேலும் அந்த நீரை பேய், பிசாசு, சூனியம் போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முகத்தில் அடித்து, குடிக்­கவும் கொடுத்தால் கெட்ட ஆவி­களால் ஏற்­படும் தொல்­லைகள் நீங்­கும். நாகூ­ருக்கு செல்லும் பக்­தர்கள் கட்­டாயம் அந்த நீரை வாங்கிப் பரு­­கு­கின்­ற­னர். இந்த விஷயம் அங்கு வரும் பெரும்­பா­லோ­­னோ­ருக்கு தெரி­­வ­தில்லை. கேள்­விப்­பட்­ட­வர்கள் மட்­டுமே அதனை வாங்­கிப் பரு­கு­கின்­ற­னர்.

அறி­வியல் ரீதி­யான உண்­­மை

நாகூர் எஜ­மானின் இந்த ஐம்பொன் சங்­கிலி நீரை அருந்­து­­வதன் மூலம் ஒரு வகையில் அறி­வியல் ரீதி­யா­கவும் உட­லுக்கு நன்­மைகள் கிடைக்­கின்­றன. ஐம்பொன் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை. இந்த ஐம்பொன் உலோகங்களை நீரில் கலந்து அருந்துவதன் மூலம், உடலுக்குத் தேவையான உலோகச் சத்துக்கள் கிடைத்து, உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் என்பது ஐதீகமாகும்.

தண்ணீர் பாட்­டிலை வாங்கிக் கொண்டு சென்று நாகூர் தர்கா பணி­யாட்­களிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு சிறிய பாத்­தி­ரத்தில் அந்த தண்­ணீரை ஊற்றி மேற்­கூ­ரையில் உள்ள நாகூர் ஆண்­ட­வர்­களின் ஐம்­பொன் சங்­கி­லியில் நனைத்து தரு­கின்­றனர். அதனை பருகி ஏராள­மான பக்­தர்கள் நல­ம­டை­கின்­றனர். உண்­மை­யான இறையச்­சத்­துடன், நம்­பிக்­கை­யுடன் பரு­­கு­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே அவர்­க­ளது பிரார்த்­தனை பலிக்­கி­றது என்கின்­றனர் நாகூரில் வாழும் நாகூர் ஆண்­ட­வர்­களின் வாரி­சு­க­ளான சாஹிப்மார்­கள்.

Comments (0)
Add Comment