வீட்டில் ஒட்டு கேட்பு கருவியால் தந்தை -மகன் உறவில் பலத்த விரிசல்

பாமகவில் தந்தை, மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பயன்படுத்தும் அறையின் இருக்கை அருகே ஒட்டு கேக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் தந்தையும், மகனும் சேரவே முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கி இருப்பதால் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் புலம்பத்தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் வன்னியர் சங்கத்தை வழிநடத்தி படிப்படியாக அரசுக்கு எதிராக பலவேறு போராட்டங்களை முன்னெடுத்து பாமக என்ற கட்சியை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ். பாமக உருவான பிறகு வட மாவட்டங்களில் வன்னியர் ஓட்டுக்களை பெற வேண்டுமானால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கண்டிப்பாக கூட்டணி சேரவேண்டும் என்ற சூழிநிலையை உருவாக்கியதுதான் தனித்து போட்டியிட்டாலும் 4,5 எம்.எல்.ஏ.க்களை பெற முடியும் என்ற நிலையையே அரசியல் காலத்தில் உருவாக்கினார். இதனால் ப.ம.க உடன் கூட்டணி சேர திமுக மூத்த தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட ஆர்வம் காட்டினார். தங்களை விட்டால் திராவிட கட்சிகளுக்கு வேறு வழியில்லை என்ற எண்ணம் தோன்றிய பிறகு கூட்டணி சேர பல்வேறு நிபந்தனைகளை அடுக்கடுக்காக வைக்க தொடங்கினார் ராமதாஸ். ராமதாஸ் வைக்கும் நிபந்தனைகள் எல்லை மீறி செல்வதாக இரு தலைவர்களும் எரிச்சல் அடைந்து கூட்டணியில் இருந்து விலக்கிவைக்க தொடங்கிய பிறகு ப.ம.க. வீழ்ச்சி தொடங்கியது என்றே கூறலாம்.

தாங்கள் எந்த கட்சியுடன் கூட்டு வைத்தாலும் வெற்றிபெறும் என்ற எண்ணத்தில் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி வைத்ததால் கட்சி வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைய தொடங்கியது. தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ராமதாஸ் கூறிய சத்தியத்தை மீறி டாக்டர் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதும் கட்சியில் பெரும் சோர்வை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெளிப்படையாக விமர்சனம் செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டது. தன்னுடைய பெயரை கூட அன்புமணி பயன்படுத்த கூடாது என ராமதாஸ் கூறும் நிலை உருவானது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையில் அன்புமணி தைலபுரம் தோட்டத்திற்கு சென்று தாயை சந்தித்து வந்தார்.

மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் ஷோபாவிற்கு அடியில் லண்டனில் இருந்து வாங்கப்பட்ட ஒட்டுகேக்கும் கருவி பொறுத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். நவீனமான ஒட்டுகேக்கும் கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருவிக்கு அருகில் நின்று பேசினால் கருவியில் உள்ள சிம் தானாகவே ஆக்டிவேட் ஆகி டயல் ஆகும். இதை எதிர்தரப்பில் உள்ளவர்கள் தங்களுடைய போனில் இருந்து ராமதாஸ் மற்றும் அறையில் உள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியும். லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் சிம் கார்டுக்கு 30 ஆயிரம் ருபாய் மதிப்பிற்கு வெளிநாட்டு இன்டர்நெட் இணைப்பு ரீசார்ஜ் செய்யப்பட்டிருந்ததையும் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இதை அறிந்த டாக்டர் ராமதாசும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கண்டிப்பாக தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை கண்டுபிடிக்கவே இந்த ஒட்டுக்கேட்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதாக ராமதாஸ் கருதுகிறார். இதை வைத்தது தன்னுடைய மகன் அன்புமணியோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் ஆளும்கட்சி இந்த சதிவேலையின் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க நிபுணர்களிடம் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவியால்
தந்தை i-மகன் உறவில் பலத்த விரிசல்

பாமகவில் தந்தை, மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பயன்படுத்தும் அறையின் இருக்கை அருகே ஒட்டு கேக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் தந்தையும், மகனும் சேரவே முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கி இருப்பதால் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் புலம்பத்தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் வன்னியர் சங்கத்தை வழிநடத்தி படிப்படியாக அரசுக்கு எதிராக பலவேறு போராட்டங்களை முன்னெடுத்து பாமக என்ற கட்சியை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ். பாமக உருவான பிறகு வட மாவட்டங்களில் வன்னியர் ஓட்டுக்களை பெற வேண்டுமானால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கண்டிப்பாக கூட்டணி சேரவேண்டும் என்ற சூழிநிலையை உருவாக்கியதுதான் தனித்து போட்டியிட்டாலும் 4,5 எம்.எல்.ஏ.க்களை பெற முடியும் என்ற நிலையையே அரசியல் காலத்தில் உருவாக்கினார். இதனால் ப.ம.க உடன் கூட்டணி சேர திமுக மூத்த தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட ஆர்வம் காட்டினார். தங்களை விட்டால் திராவிட கட்சிகளுக்கு வேறு வழியில்லை என்ற எண்ணம் தோன்றிய பிறகு கூட்டணி சேர பல்வேறு நிபந்தனைகளை அடுக்கடுக்காக வைக்க தொடங்கினார் ராமதாஸ். ராமதாஸ் வைக்கும் நிபந்தனைகள் எல்லை மீறி செல்வதாக இரு தலைவர்களும் எரிச்சல் அடைந்து கூட்டணியில் இருந்து விலக்கிவைக்க தொடங்கிய பிறகு ப.ம.க. வீழ்ச்சி தொடங்கியது என்றே கூறலாம்.

தாங்கள் எந்த கட்சியுடன் கூட்டு வைத்தாலும் வெற்றிபெறும் என்ற எண்ணத்தில் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி வைத்ததால் கட்சி வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைய தொடங்கியது. தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ராமதாஸ் கூறிய சத்தியத்தை மீறி டாக்டர் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதும் கட்சியில் பெரும் சோர்வை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெளிப்படையாக விமர்சனம் செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டது. தன்னுடைய பெயரை கூட அன்புமணி பயன்படுத்த கூடாது என ராமதாஸ் கூறும் நிலை உருவானது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையில் அன்புமணி தைலபுரம் தோட்டத்திற்கு சென்று தாயை சந்தித்து வந்தார்.

மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் ஷோபாவிற்கு அடியில் லண்டனில் இருந்து வாங்கப்பட்ட ஒட்டுகேக்கும் கருவி பொறுத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். நவீனமான ஒட்டுகேக்கும் கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருவிக்கு அருகில் நின்று பேசினால் கருவியில் உள்ள சிம் தானாகவே ஆக்டிவேட் ஆகி டயல் ஆகும். இதை எதிர்தரப்பில் உள்ளவர்கள் தங்களுடைய போனில் இருந்து ராமதாஸ் மற்றும் அறையில் உள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியும். லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் சிம் கார்டுக்கு 30 ஆயிரம் ருபாய் மதிப்பிற்கு வெளிநாட்டு இன்டர்நெட் இணைப்பு ரீசார்ஜ் செய்யப்பட்டிருந்ததையும் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இதை அறிந்த டாக்டர் ராமதாசும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கண்டிப்பாக தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை கண்டுபிடிக்கவே இந்த ஒட்டுக்கேட்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதாக ராமதாஸ் கருதுகிறார். இதை வைத்தது தன்னுடைய மகன் அன்புமணியோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் ஆளும்கட்சி இந்த சதிவேலையின் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க நிபுணர்களிடம் ராமதாஸ் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். ஏற்கனவே தந்தை, மகன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது இருவரும் மீண்டும் சேர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக பாமக மூத்த தலைவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

இதுபோன்ற ஒட்டுக்கேட்கும் கருவி முக்கிய அரசியல் கட்சி தலைவர் வீட்டு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சி மூத்த தலைவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆளும் கட்சி இதன் பின்னணியில் உள்ளதா? தங்கள் வீடுகளிலும் இதுபோன்ற கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களும் வீடு முழுவதும் அலச தொடங்கிவிட்டனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒட்டுக்கேட்பு கருவி அரசியல் கட்சி தலைவர் வீட்டில் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.குடும்பத்தினர் கேட்டுள்ளனர். ஏற்கனவே தந்தை, மகன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது இருவரும் மீண்டும் சேர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக பாமக மூத்த தலைவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

இதுபோன்ற ஒட்டுக்கேட்கும் கருவி முக்கிய அரசியல் கட்சி தலைவர் வீட்டு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சி மூத்த தலைவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆளும் கட்சி இதன் பின்னணியில் உள்ளதா? தங்கள் வீடுகளிலும் இதுபோன்ற கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களும் வீடு முழுவதும் அலச தொடங்கிவிட்டனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒட்டுக்கேட்பு கருவி அரசியல் கட்சி தலைவர் வீட்டில் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.

Comments (0)
Add Comment