பத்தி எரி­யு­து….

343

அக்னி துறையில் பற்றி எரியும் லஞ்சத் தீ!

‘அக்னி’ துறை­யில் பணிபு­ரியும் பெண் அதி­காரி ஒருவர் மேலதிகா­ரிக்கு தர வேண்டும் என்று சொல்­லியே பெரிய அளவில் வசூலில் ஈடு­பட்டு வரு­வ­தாக அங்கு பணி­பு­ரியும் சிலரே டிஜிபி அலு­வ­லக மேலி­டத்­துக்கு தக­வல்­களை சொல்லி புலம்பி வரு­கின்­றார்­களாம். ஆனால் அந்த பெண் அதி­கா­ரியை ஆட்­டவும் முடி­யாது, அசைக்­கவும் முடி­யாது என்­கின்­றனர் விவ­ரம் தெரிந்த காக்­கிகள். ஏற்­க­னவே பணியில் ஒழுங்­கீனம் கார­ண­மாக இவரை ­து­றையை விட்டே டிஸ்மிஸ் செய்து ப்ரி­ய­மான அதி­காரி கடும் நட­வ­டிக்கை எடுத்­தாராம்.

ப்ரி­ய­மான அதி­­காரி இருந்­த­வரை இந்தப்பெண் அதி­காரி மீண்­டும் துறைக்குள் வர­வி­டாம­ல்  முட்­டுக்­கட்டை போட்டு வைத்­தி­ருந்­தாராம். சுமார் 7 ஆண்­டுகள் டிஸ்மிசில் இருந்த அந்த பெண் அதி­காரி முன்னாள் தலைமை அதி­கா­ரி­ ஒரு­வ­ரின் தயவால் 1 கோடி கரன்சி கொடுத்து மீண்டும் போஸ்­டிங்கை பிடித்து உள்ளே நுழைந்­துள்­ளாராம். லஞ்சப் பணத்தில் பெரிய அளவில் சொத்து சேர்த்­துள்ளதாக கூறப்­படும் அந்த பெண் அதி­காரி வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்தது தொடர்­பான ஆவ­ணங்கள் லஞ்ச ஒழிப்­புத்­து­றைக்கு சென்­றாலும் அங்கு பணி­பு­ரியும் பெண் அதி­கா­ரியின் புதல்வர் அந்த விவ­ரங்­களை மேலி­டத்­துக்கு செல்­லா­மல் பார்த்துக் கொள்­கி­றா­ராம்.

மேலும் கண­வ­ரைப் பிரிந்து வாழும் அந்தப் பெண் அதி­கா­ரியின் தற்­போ­தைய லிவிங் டூ கெதர் கண­வரும் அக்­னித்­து­றையில் பெரிய பதவியில் இருப்­பதால் பெண்ணுக்கு எதி­ராக எந்தப் புகாரும் ­துறையின் மேலி­டத்­துக்கு செல்­லாமல் பார்த்துக் கொள்­கி­றாராம். 7 ஆண்­டுகள் டிஸ்­மி­சுக்கு பிறகு பெண் அதிகா­ரிக்கு போஸ்டிங் போட்ட போது குறிப்­பிட்ட காலங்­க­ளுக்கு இட­மாற்றம் மற்றும் பதவி உயர்வு எதுவும் வழங்­கப்­ப­ட­க் கூ­டாது என்ற உத்­த­ரவு உள்­ள­தாம். அது தெரி­யாமல் தற்­போது துறைக்கு புதி­தாக வந்­துள்­ள நேர்­மை­க்குப் பெயர் போன பெண் இயக்­குநர், ஊழல் பெண் அதி­கா­ரியை தனது பர்­சனல் அதி­கா­ரி­யாக நிய­மிக்க முடிவு செய்­துள்­ளாராம். ஏற்­க­னவே ஊழல் புகாரில் பணி­யில்­ இ­ருந்து டிஸ்மிஸ் செய்­யப்­பட்ட அந்தப் பெண் அதி­காரி தற்­போது தலைமை இயக்­கு­ந­­ருக்கு பிஎஸ்ஓ என்றால் தமிழ்­நாடு அக்­­னித்­துறை லஞ்ச­, ஊழல் துறையாவதில் எந்த சந்­தே­க­மு­மில்லை என்று புல­ம்­புகின்­றார்­க­ளாம் அக்னி து­றை காக்­கி­கள்.