மீண்டும் களத்தில் துணை முதல்வர் ஓரங்கட்டப்படும் மூத்த நிர்வாகிகள்

189

திமுகவில் துணை முதல்வர் உதயநிதிக்கு முக்கிய கட்சிப்பதவி வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டதோடு எல்லா மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் இவரை அழைச்சு நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம் நடத்தணும்னு உத்தரவு போட்டிருக்குறதால இளைஞர் அணி நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாங்க.

திமுகவில் துணை முதல்வர் பதவியை இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பிறகு கட்சியை தீவிரமா வழிநடத்திகிட்டு இருந்தார். திடீர்னு உதயநிதி கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்குறத முழுசா நிறுத்திகிட்டத்தோட, சென்னையிலே கூட எந்த நிகழ்ச்சியிலயும் கலந்துக்காம ஒதுங்கி இருந்தார். இதனால கட்சி நிர்வாகிகளுக்கு என்ன நடக்குதுன்னே புரியலேன்னு குழப்பத்துல இருந்தாங்க. கடந்த சில நாட்களா உதயநிதி மறுபடியும் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிச்சுட்டார். இதுபத்தி கட்சி வட்டாரங்கள்ல விசாரிச்சப்பத்தான் பரபரப்பான தகவல் கிடைச்சுது. கட்சியில முக்கிய பதவிகளா கருதப்படுறது கட்சி தலைவர் பதவிக்கு அப்புறம் பொது செயலாளர், பொருளாளர், துணை பொதுச்செயலார்கள் பதவிங்கதான். உதயநிதி துணை முதல்வரா இருந்தாலும் அவரோட இளைஞர் அணி செயலாளர் பதவிக்குறது துணை அமைப்போடு பதவிதான். இதனால கட்சியின் பொதுக்குழு, செயற்குழு போன்ற முக்கிய கூட்டங்கள்ல அவரால மேடையில போய் உட்கார முடியாது.

மேடையில முன்வரிசைல இருந்தாலும் மேடையில உக்காருறதுதான் முக்கியம்னு உதயநிதி நினச்சாராம். கட்சியோட முக்கிய பதவியான பொதுச்செயலர் பதவியில் இருக்குற அமைச்சர் துரைமுருகன் உடல்நலமில் லாம இருக்குறதால கொஞ்சம் கொஞ்சமா ஓரம்கட்டப்பட்டுட்டார். இந்த பதவிக்கு கட்சி பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் நேரு, ஏ.வ.வேலு ஆகியோர் போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறாங்க. துணை பொதுச்செயலாளர் பதவியும் இந்த பதவிக்கு அடுத்து முக்கியமானது. அதனால துணை பொதுச்செயலாளர் பதவி தனக்கு தரணும்னு தலைவருக்கு அம்மா மூலமா சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போ பதவி கொடுத்தா சர்ச்சை ஆகிரும். சட்டசபை தேர்தல் முடிஞ்ச பிறகு தரேன்னு சொன்னதால அப்செட்டான உதயநிதி கட்சி பணிகள்ல இருந்து விலகி அமைதியாகி இருந்துட்டாராம். இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்னு குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும் தலைவர் கிட்ட எடுத்து சொன்னதால வர்ற செப்டம்பர் மாதம் திமுக சார்புள்ள நடத்தப்பட இருக்குற முப்பெரும் விழாவுல கட்சியில மேடையில உக்காருற மாதிரி முக்கிய பதவியை உருவாக்கி தாரேன்னு ஒத்துக்கிட்டாராம் தலைவர்.

இதனால சந்தோஷத்துல மறுபடியும் கட்சி நலத்திட்ட உதவிக்களையும், பொதுக்கூட்டங்கள்லயும் கலந்துக்க ஆரம்பிச்சிட்டாராம். அமைச்சர் ஏ.வா. வேலு முந்திகிட்டு துணை முதல்வர் உதயநிதியை கூட்டிகிட்டு போய் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள்னு தூள் கிளப்ப ஆரம்பிச்சுட்டார். இதோட தேர்தலுக்கு 8 மாசம் மட்டுமே இருக்குறதால எல்லா மாவட்டங்கள்லயும் உதயநிதியை அழைச்சிட்டு போய் நலத்திட்ட உதவிகள், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தணும்னு மேலிடம் உத்தரவு போட்டுருச்சு. வரபோற சட்டசபை தேர்தல்ல இளைஞர் அணிக்குத்தான் அதிக சீட்டுகள் தரப்போறாங்கன்னு தகவல் பரவி இருக்கு. மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், பலமுறை எல்.எல்.ஏ. சீட்டு வாங்குனவங்களுக்கு இந்த தடவை சீட்டு கிடையாதுன்னு மேலிடம் தெளிவா சொல்லிட்டதால இளைஞர் அணி நிர்வாகிகள் பலருக்கு எம்.எல்.ஏ. சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்குறதால ரொம்ப சந்தோசமா இருக்குறாங்களாம். இதனால மறுபடி துணை முதல்வரை பல கூட்டங்கள்ல பாக்களானு சொல்றாங்க. அதேசமயம் சர்ச்சை பேச்சுக்களை விட்டுட்டு ப.ஜ.க. கட்சி, அதிமுக கட்சியை பத்தி பேசுறது நல்லதுன்னு மூத்த நிர்வாகிகள் சொல்றாங்களாம்