சென்னை, ராமாபுரத்தில் சட்டவிரோதமாக 405 உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராமாபுரம், பெரியார் சாலை, வ.உ.சி தெரு சந்திப்பு அருகே ராமாபுரம் போலீசார் ரகசியமாக கண்காணித்த போது அங்கு உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ராமாபுரம், பெரியார் சாலையைச் சேர்ந்த ரூபன் குமார் (27), மூகாம்பிகை நகரைச் சேர்ந்த பிரபு (29) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து Tydol, Tabedac, Aspadol, Talpidol, Topcynta ஆகிய 405 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.ரூபன்குமார் மீது 5 வழக்குகளும், பிரபு மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.