மீண்டும் பரவும் கொரோனா: முகக்­க­வசம் கட்­டா­ய­மில்­லை: ­த­மி­ழக அரசு

206

கொரோனா தொற்று நோய் 2019 ஆ-ம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றி உலகம் முழு­வதும் பரவி பெரிய உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்தியது.

இதில் மத்­திய அரசும், மாநில அரசும் பெரி மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்­வூட்டி கோவி­ஷீல்டு போன்ற தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது. இந்­நி­லையில் கொரோனா மீண்டும் பரவி வரு­கி­றது. உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்தி­ருந்­த­தது.

இந்நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தகவல் பரவிய நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அளித்­துள்ள விளக்கத்தில், கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. வீரியம் இ ல்லாத கொரோனா என்பதால் நோய் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்­ளார்,