விஜய்­ போட்ட அதி­ரடி வியூ­கம்: திகைத்துப் போன திமுக அமைச்­சர்

252

மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள த.வெ.க மாநில மாட்டில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை கலந்து கொள்­வார்கள் என கட்சித் தலைவர் விஜய் எதிர்பார்க்கி­றார். கட்சி தொண்டர்களை நேரடியா சந்திக்கும் வகையில் தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டத்துக்குள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் பார்க்க வேண்டும் என அதிரடி திட்டம் தீட்டி இருக்கிறாராம் விஜய்.

கட்சி தொடங்கி 2 ஆண்­டு­க­ளுக்குள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அதிரடியாக முதல் பிரமாண்ட கூட்டத்தை கூட்டி ஆளும், எதிர்க்கட்சிகளை அதிர வைத்­துள்ளார் கட்சி தலைவர் விஜய் என்று அந்தக் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்­டுள்­ள­னர். மொத்தம் 7 இடங்க­ளில் இதே போல பொது கூட்டத்தை கூட்ட வேண்டும் என விஜய் அறிவித்துள்­ளார்.

இரண்டாவது கூட்டம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் 500 ஏக்கர் பரப்பளவுள்ள நடத்துவதற்­கான பூமி பூஜையையும் போடப்­பட்­டுள்­ள­து. மதுரையில நடக்கப் போகும் இந்தப் பொதுக்கூட்டம் தங்களது கட்சிக்கே திருப்புமுனை கூட்டமா இருக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார். மும்பையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமான 500 ஏக்கர் இடத்தை தேர்வு செஞ்ச விஜய் இந்த இடத்துல குறைஞ்ச பட்சம் 10 லட்சத்துல இருந்து 15 லட்சம் வரைக்கும் தொண்டர்கள் கூடுகிற மாதிரி பிரமாண்டமான கூட்டமா இருக்க வேண்­டும்.

தொண்டர்களுக்கு எதுவும் உடல் நிலை பாதிப்­ப­டைந்தால் உடனே சிகிச்சை அளிப்­ப­தற்கு மதுரையில உள்ள பிரபல மருத்துவமனைகளுடன் பேசி தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளதாம். மருத்துவமனையில் உள்ள 50 ஆம்புலன்சுகளையும் இந்த மாநாடு நடக்குற இடத்தி­லேயே எப்போதும் போதுமான மருத்துவ குழுவோடு தயாராக இருக்க வேண்டும். விஜய் பேசும் மேடை பிரமாண்டமாக இருப்ப­தோடு கட்சித் தொண்டர்கள் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது போல அமைக்கப்­ப­ட­வுள்­ள­ததாம்
இதற்கு தேவையான பிரமாண்டமான லைட் வசதி செய்வதுடன், தன்னுடைய நிழல் பின்பக்கம் விழ முடி­யாத அள­வுக்கு நவீனமான லைட் செட்டிங்குகள் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்­ளா­ராம். இந்த மேடை போடும் அசைன்­மென்ட் பிரபல ஆர்ட் டைரக்டர் ஜெ.பி. கிருஷ்ணாவிடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளதாம்.

அத்துடன் பிரமாண்டமான கூட்டத்தில் வெளியில் இருந்து தான் வரும் போது தொண்டர்களை அருகில் இருந்து பார்க்கும் வகையில் 2 கிலோமீட்டர் தூரம் கூட்டத்துக்குள்ளயே நடந்து வரும் வகையில் தடுப்புகள் அமைக்கணும். இதனால தொண்டர்களை அருகில் இருந்து பார்ப்­ப­தோடு அவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்துவதற்கு வச­தி­யாக இருக்க வேண்டும் என விஜய் உத்தரவு போட்டிருக்கிறாராம்.

இதனால் விஜய் உள்ளே நுழையும் போது தொண்டர்கள் போடும் விசில், கூச்சல் சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் கேட்டு ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்­டும். பக்கத்தில் தொண்டர்கள் பார்ப்­பதால் ரொம்ப சந்தோசமாகி விடு­வார்கள் என விஜய் திட்டம் போட்டு கொடுத்துள்­ளா­ராம். கூட்டம் சேராதபடி ஆளும் கட்சி பல இடையூறுகளை செய்வார்­கள். இதையும் தாண்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்திக் காட்டி வருகிற தேர்த­லில் மக்கள் நம்ம பக்­கம்தான் உள்­ளனர் என்­ப­தை எல்லா கட்சிகளுக்கும் நிரூபிச்சு காட்டணும்னும் உத்தரவு போட்டுள்ளாரம் தவெக தலைவர் விஜய். இதனால் எல்லா வேலைகளையும் செய்ய பல நூறு பேரை அழைத்துச் செல்ல ஆர்ட் டைரக்டர் உள்ளிட்டவங்க தயாராகி வரு­கின்­­றார்­க­ளாம். மதுரையை ­கையில் வைத்­தி­ருப்ப­தாக சொல்லும் அமைச்சர் மூர்த்திக்கு இது பெரிய சவாலாதான் இருக்கப் போகிறது என மதுரை மாவட்ட தா.வெ.க நிர்வாகிகள் கெத்­தாக சொல்லிக் கொள்­கின்­ற­னர்.