ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலை… தமிழ் சினிமாவில் நடப்பது என்ன?

217

சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஸ்ருதிநாராயணன். ஒரு கட்டத்தில் இவரின் ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனதால் இன்னும் பிரபலம் ஆனார். ஆனால், அவரோ அது மார்பிங் என்றார். பின்னர் அந்த வீடியோ குறித்து ஸ்ருதிநாராயணன் எதுவும் பேசவில்லை. ஆனால், அடுத்தடுத்த சில வீடியோக்கள் வந்தன.

இந்நிலையில், ரங்கராஜ் இயக்கி, நடிக்கும் கட்ஸ் என்ற படத்தில் ஸ்ருதிநாராயணன் நடிப்பதாக தகவல் கசிந்தது. அந்த பட விழாவிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், தனது கேரக்டர் குறித்து எதுவும் பேசவில்லை. பல்வேறு சிக்கல்கள் காரணமாக கட்ஸ் படம் ரிலீஸ் ஆகாமல் தத்தளித்தது. இந்நிலையில், இந்த வாரம் கட்ஸ் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று கட்ஸ் படத்தி்ன் பிரஸ் ஷோ நடந்தது. அதில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ரங்கராஜ் நடித்துள்ளார். அப்பா கேரக்டர் ஜோடியாக கிராமத்து பெண் வேடத்தில் ஸ்ருதி நாராயணன் வந்தார். அந்த படத்தை பார்த்த பலரும் ஸ்ருதி நடிப்பை, அவர் டயலாக்கை பாராட்டினர். காரணம் துபாயில் படித்த ஸ்ருதி பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். சில காட்சிகளில் வீரமாகவும் கலக்கி இருந்தார்.

படம் முடிந்தபின் இயக்குனரிடம் ஸ்ருதிநாராயணன் எங்கே என்று பலரும் கேட்க, வேறு படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் வர முடியவில்லை. இந்த கதைக்காக ஸ்ருதியை அணுகினோம். அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார். ஒரு சிங்கள் ஷாட் காட்சியில் கூட கடுமையமான உழைப்பை வெளிப்படுத்தினார்.இங்கே தவறு செய்யாத மனிதன் கிடையாது. அவருக்கு ஒரு அவப்பெயர் வந்து இருக்கிறது. அவரை வாழ விடுங்க ’ என்றார்.

பின்னர் இயக்குனர் கூறுகையில் ‘‘‘பல ஆண்டுகள் போராடி இந்த படத்தை எடுத்துள்ளேன்.ஆனால், முதலில் சொன்ன தேதியில் இந்த படம் வெளியாகவில்லை. கமல்ஹாசனின் தக்லைப் வந்ததால் எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. இப்போது இந்த வாரம் 77 தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகிறது. ஒரு படத்தை பார்க்காமலே குறைவான தியேட்டர் ஒதுக்குகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதே சிக்கல் இருந்தது. ஆனாலும், வேறு வழியில்லாமல் கட்ஸ் படத்தை இப்போது வெளியிடுகிறோம். ’’ என்று ஆதங்கப்பட்டார்.

கமலின் தக்லைப் படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனால், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆபாச வீடியோவால் ஸ்ருதிநாராயணன் பெயர் கெட்டது. உண்மையில் இந்த படத்தில் அவர் நடிப்பு, மகனுக்காக அவர் செய்கிற காரணம் அருமை. கணவர் பாசம், தாய்பாசத்திலும் மிரட்டியிருக்கிறார். ஆனாலும், அவர் நடித்த படத்தை பலரும் பார்க்க முடியாத அளவுக்கு குறைவான தியேட்டர்களில் வெளியாக உள்ளது ’என்கிறார்கள் கோலிவுட்டில்.
திரை ரசிகன்