ரூ. 73 லட்சம் வங்கி மோசடி ஆசா­மியை தட்டி தூக்­கிய சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ்

188

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை அடை­யாறு, எஸ்­பிஐ வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி. இவ­ரது வங்கியில் கோடம்­பாக்­கத்தைச் சேர்ந்ததி வேல்முருகன் என்பவர் Annai Casting Pvt Ltd., என்ற நிறுவனத்தின் பெயரில் தொழில் கடன் பெற்றார். அந்­தத் தொகையில் வாங்கிய இயந்திரங்களை தனது நிறுவனத்தில் Install செய்யாமலும், தொழிலை விரிவுபடுத்தாமலும் காலம் தாழ்த்தி வந்­துள்ளார். மேலும் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்து தலை­ம­றை­வாகி விட்டார். இது தொடர்­பாக வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி சென்னை போலீஸ் கமி­ஷனர் அருணிடம் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்­பாக கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ­க­­மி­ஷனர் ராதிகா மேற்­பார்­வை­யில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த வேல்­மு­ருகன் (வயது 45) என்­ப­வரை இன்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் வேல்­மு­ருகன் நீதிமன்ற காவலுக்க உட்படுத்தப்பட்டார். எதிரியை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, காவல் குழுவினரை கமி­ஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.