சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி. இவரது வங்கியில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்ததி வேல்முருகன் என்பவர் Annai Casting Pvt Ltd., என்ற நிறுவனத்தின் பெயரில் தொழில் கடன் பெற்றார். அந்தத் தொகையில் வாங்கிய இயந்திரங்களை தனது நிறுவனத்தில் Install செய்யாமலும், தொழிலை விரிவுபடுத்தாமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்து தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக வங்கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி சென்னை போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த வேல்முருகன் (வயது 45) என்பவரை இன்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் வேல்முருகன் நீதிமன்ற காவலுக்க உட்படுத்தப்பட்டார். எதிரியை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, காவல் குழுவினரை கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.