மணிரத்னம் படத்தை மாமனாரின் இன்பவெறியுடன் ஒப்பிடுவதா? சிந்துசமவெளியுடன் சேர்த்து கமல்ஹாசனை கலாய்ப்பதா?

250

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உட்பட பலர் நடித்த தக்லைப் படத்தைதான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றுகிறார்கள். வஞ்சம் வைக்காமல் வசை பாடுகிறார்கள். இந்தியளவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கிய அந்த படத்தை, மலையாள பிட் படமான மாமனாரின் இன்பவெறியுடன் ஒப்பிட்டு சிலர் மகிழ்கிறார்கள். ஒருசிலர் அமலாபால் நடித்த சிந்துசமவெளி படத்தின் அடுத்த பாகம் என்று, கமல்ஹாசன் நடிப்பை திட்டி தீர்க்கிறார்கள்.

உண்மையிலே இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதா? இந்தியளவில் முன்னணி சினிமா கலைஞர்களான மணிரத்னம், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், நாசர், ரவிகேசந்திரன் போன்றவர்கள் இப்படிப்பட்ட படங்களை தருவார்களா? உண்மையில் நடப்பது என்ன? இதன் பின்னணி என்ன என்று கோலிவுட்டில் விசாரித்தோம்

தக்லைப் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், படம் அந்தளவுக்கு இல்லை என்பது உண்மை. ஆனால், ஆபாச படத்துடன் இந்த படத்தை ஒப்பிடக்கூடாது. அந்த காலத்தில் வந்த மலையாள பிட் படம் மாமனாரின் இன்பவெறி, அமலாபால் நடிக்க, மிருகம் சாமி இயக்கிய படம் சிந்துசமவெளி. அந்த படங்களுடன், இந்த படத்தை ஒப்பிடுவது சரியல்ல, அந்த அளவுக்கு மோசமான படமல்ல. இது பக்கா ஆக்சன் படம், தாதாக்கள், ரவுடியிசம், மோதல் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட். இந்த படங்களுடன் தக்லைப்பை ஒப்பிட முக்கியமான காரணம் படத்தில் வரும் திரிஷா கேரக்டர்.

முதலில் அவர் பாரில் ஆடும் டான்சராக காண்பிக்கப்படுகிறார். நடுத்தர வயது கமல், கதைப்படி சிம்பு தங்கையை தேடி செல்கிறார். ஆனால், சபலம் காரணமாக திரிஷாவை காதலி ஆக்குகிறார். அவருக்கு கதைப்படி அபிராமி, திருமண வயதில் ஒரு மகள் இருப்பதாக கதை நகர்கிறது. ஜெயிலுக்கு போய் வீடு திரும்பும் கமல்ஹாசன் அபிராமி வீட்டுக்கு செல்லாமல் திரிஷாவுடன் மூத்த வயதில் ரொமான்ஸ் செய்வதாக சீன்கள் வருகிறது.

ஒரு கட்டத்தில் கமலை சிம்பு கொல்ல நினைக்க, தனது அப்பா மாதிரி நினைக்கும் கமல் ஆசை நாயகியான திரிஷாவை தன் ஆசை நாயகி ஆக்குகிறார். சூழ்நிலை காரணமாக திரிஷாவும் அதற்கு சம்மதிக்கிறார். சிம்புவிடம் இருந்து திரிஷாவை மீட்க நினைக்கிறார் கமல், இப்படி சில சீன்கள்.

இது கதையில் ஒரு பகுதிதான். ஆனால், மணிரத்னம் படங்களில் இதை எதிர்பாராதவர்கள், கமலின் இப்படிப்பட்ட தவறான கோணத்தை எதிர்பாராதவர்கள் கமலை, மணிரத்னத்தை, படத்தை ஆபாச படங்களுடன் ஒப்பிட்டு கலாய்கிறார்கள். இவர்களின் பலர் சிம்புவை கிண்டல், கேலி செய்யவில்லை. கமலை மட்டும் கடுமையாக விமர்சிக்க வேறு சில காரணங்களும் இருக்கிறது.

இந்த படம் உருவாகும் காலத்தில் அவர் திமுகவுடன் கூட்டணி வைத்தார். இந்த படம் வெளியாகும் காலத்தில் அந்த கூட்டணி உடன்பாடு காரணமாக ராஜ்யசபா எம்பி ஆகும் வேலைகளில் இருந்தார். திமுக கூட்டணிக்கு வந்து விட்ட கமலை, எதிரணியினர், எதிர் வரிசையில் இருக்கும் அரசியல் கட்சியினர் தங்கள் ஐடி விங்கை ஏவி, இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்தனர். கேவலப்படுத்தினர்.

கமலை விமர்சிக்க இந்த படத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. அதேபோல், மணிரத்னம் மீது பலருக்கு வேறுவகையில் கோபம். அதையும் இந்த படத்தில் காண்பித்தனர் என்றும் கேள்வி.

சில வாரங்களுக்கு முன்பு இன்பூளுன்சர் எனப்படும் சோஷியல் மீடியா புரமோட்டர்களை அழைத்து, மாமல்லபுரம் அருகே பெரிய பார்ட்டி, விருந்து வைத்து அவர்கள் முன்னிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு. அந்த விருந்துக்கு சிலர் மட்டுமே அழைக்கப்பட, அந்த கோபத்தில் மற்ற சோஷியல் மீடியா ஆர்வலர்கள், இன்புளூன்சர்கள், மற்ற மீடியாவினர் படத்தை வேண்டுமென்றே கழுவி ஊற்றியதாகவும் தகவல்.

தவிர, படம் பார்த்த பல ஆடியன்சும் கமல், பட மீதான கோபத்தை அதிகப்படுத்த, அதை சில யூடியூப் சேனல்கள், சோஷியல் மீடியாவினர் அதை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டு காசு பார்க்க, அனைவரும் திட்டுகிறார்கள், நாமும் திட்டுவோம் என்ற மனநிலையில் மற்றவர்களும் திட்டியதாக ஒரு தரப்பு சொல்கிறது.

ஆனாலும், தமிழகத்துக்கு, நம் கலாச்சாரத்துக்கு செட் ஆகாத இந்த கதையை மணிரத்னம் எடுத்து இருக்க கூடாது. இந்த வயதில் கமல் இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்து இருக்க கூடாது. தவிர, பல காட்சிகளில் பெண்கள் காதல் தோல்வி, கர்ப்பம், சரக்கு அடிப்பது, தவறான நட்பு என்று பிற்போக்காகவே காண்பிக்கப்படுகிறார்கள்.

மனைவியாக வரும் அபிராமி கேரக்டரும் பல பெண்கள், பல ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. திரிஷா போர்ஷன் வேணாம், அல்லது வேறு வகை திரைக்கதை தேவை என்று முதலில் சொல்லி இருந்தால் இவ்வளவு வன்மம், வசவு, கேலி, கிண்டலை அவர் சந்தித்து இருக்கமாட்டார் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.

இத்தனை வருட சினிமா பயணத்தில் இப்படிப்பட்ட கேரக்டரில், பெண்களை அவமானப்படுத்தும், அல்லது போகப்பொருளாக காண்பிக்கும் கேரக்டரில் ரஜினி நடித்தது இல்லை. எம்ஜிஆர் பற்றி சொல்லவே வேண்டாம்.. அதுவே அவர்கள் நல்ல பாலிசி.

ஆனால், நாம் எதை செய்தாலும் மக்கள் ஏற்பார்கள் என தைரியத்தில் கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் வெற்றி மமதையில் இருந்த மணிரத்னம் தவறான ஸ்கிரிப்ட் எழுத, மக்கள், மீடியா, சோஷியல் மீடியா தகுந்த பதிலடி கொடுத்து விட்டார்கள். இனியாவது இவர்கள் மாற வேண்டும். பெண்களை தவறாக காண்பிக்க கூடாது.

இது சிம்பு படமல்ல, 70 வயதில் இருக்கும் கமல்ஹாசன், மணிரத்னம் இப்படிப்பட்ட கிளுகிளு சீன்களை, தவறான, சற்றே ஆபாச காட்சிகளை, பெண்கள் குறித்த பிற்போக்கான பார்வயையை தவிர்த்து இருந்தால் தக்லைப் படத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு வந்து இருக்காது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்
-திரை ரசிகன்.