விரைவில் புது டிஜிபி பேனல் கமிட்டி கூட்டம்: பொறுப்பு டிஜிபி நீடிப்­பாரா? தமி­ழக காவல்­து­றையில் பர­ப­ரப்­பு

252

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான பேனல் கமிட்டி கூட்டத்தை வரும் 26-ம் தேதி நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியல் தயாராக இருப்­பதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவுள்­ள­தாக பர­ப­ரப்பு தகவல்கள் வெளியா­கியுள்­ள­னன.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியன்று ஒய்வு பெற்றார். வழக்கமாக டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்பே புதிய டிஜிபியை நியமிக்கும் பணியை டிஜிபி அலுவலகமும், தமிழக அரசும் தொடங்கி இருக்க வேண்டும். தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக புதிய டிஜிபி தேர்வு செய்வதற்கான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பாமல் தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தியது.

தற்போதைய சீனியரிட்டி பட்டியலின்படி சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர்தான் புதிய டிஜிபியாக நியமிக்க வாய்ப்புள்ளது. இவர்களை நியமிக்க டிஜிபி அலுவலகத்தில் உள்ள முதல்வருக்கு நெருக்கமான சில ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இஷ்டம் இல்லாததால் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் இந்த உள்வட்ட அதிகாரிகள் தாங்கள் சொல்படி கேட்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் என கருதி நேர்மையான அதிகாரியான வெங்கட்ராமனை இந்த பதவியில் வலுக்கட்டாயப்படுத்தி பொறுப்பேற்க வைத்தனர்.

தங்களை விட மிகவும் இளையவரான வெங்கட்ராமனை டிஜிபி பொறுப்பு பதவியில் நியமித்தால் இவரது பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சீனியர் டிஜிபிக்கள் 8 பேரும் புறக்கணிப்பு செய்து முதல்வர் உள்வட்ட அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தனர்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவர் ஹென்றி டிபேன் உச்சநீதிமன்றத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிரகாஷ் சிங் வழக்கிற்கு எதிரானது. பொறுப்பு டிஜிபி நியமனத்தை ரத்து செய்துவிட்டு நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், உடனடியாக தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுப்பிவைத்த 8 பேர் கொண்ட டிஜிபி பட்டியலில் இருந்து நிரந்தர டிஜிபியை நியமிப்பதற்கான பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி புதிய டிஜிபியை நியமிக்கும்படி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு அனுப்பிய 8 பேர் பட்டியலை பரிசீலனை நடத்தியது. இந்த பட்டியலில் இருந்து 3 பேரை தேர்வு செய்வதற்கான பேனல் பட்டியலை வரும் 26ம் தேதி புதுடில்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் நடத்த உள்ளதாகவும், இதில் கலந்துகொள்ளும்படியும் தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் பொறுப்பு டிஜிபிக்கு தகவல் கொடுத்துள்ளது.

இதன்படி வரும் 26-ம் தேதி டெல்லியில் நடக்கும் பேனல் கூட்டத்தில் 8 பேரது பெயர்களையும் மத்திய பணியாளர் தேர்வாணைய செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஆய்வு செய்வார்கள். இதில் இருந்து 3 பேர் பட்டியலை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்து இதில் ஒருவரை புதிய டிஜிபியாக உடனடியாக நியமிக்கும்படி மத்திய பணியாளர் தேர்வாணையம் உத்தரவிடும். இதன்படி சீனியர் டிஜிபிக்களான சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோடு ஆகிய 3 பேர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு இதில் ஒருவரை முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய டிஜிபி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும்.

டெல்லியில் இருந்து அதிகாரிகள் சென்னை திரும்பி முதல்வருடன் ஆலோசனை நடத்தி புதிய டிஜிபிக்கான உத்தரவை உடனடியாக பிறப்பிப்பார்களா? அல்லது ஆலோசனை நடத்தி அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் புதிய டிஜிபி பொறுப்பேற்பாரா என்பது இறுதியாக்கப்படவில்லை.

எப்படி இருப்பினும் புதிய டிஜிபி அக்டோபர் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க போவது உறுதி. தேவை இல்லாமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து ஒரு மாதத்திற்குள் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதிய டிஜிபியை நியமித்து இந்த பதவியை கேலிக் கூத்தாக்கிய இந்த அதிகாரிகளை முதல்வர் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய டிஜிபி நேர்மையான அதிகாரிகளை தமிழகம் முழுவதும் நியமித்து சட்டம் ஒழுங்கு பராமரிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்­வ­லர்­களின் எதிர்­பார்ப்பு. இது நிறைவேறுமா என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.