மருமகளின் காதை கடித்துக்­கு­த­றிய கொடூர மாமியார்: ­கு­ம­ரியில் நடந்த பர­ப­ரப்பான சம்­பவம்

157

மது போதையில் வந்த கணவனை தட்டி கேட்ட மருமகளின் காதை கொடூரமாக கடித்து துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். டெம்போ டிரைவர். இவரது மனைவி மஞ்சு தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும் மஞ்சுவிடம் வரதட்சணை கேட்டு மாமியார் அல்போன்சாவும், கணவர் பிரின்சும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுவுக்கும், அல்போன்சாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பிரின்ஸ் மது குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். டிரைவர் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளத்தை குடித்துவிட்டு வந்ததால் மஞ்சு கணவனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அல்போன்சா மகனுக்கு ஆதரவாக மருமகள் மஞ்சுவிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அல்போன்சா மருமகளை அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் கீழே விழுந்த மஞ்சுவின் காதலி பலமாக அல்போன்சா கடித்ததில் காது துண்டாகி காதில் இருந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்காமல் மஞ்சு அலறியதை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மஞ்சுவின் காது துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து பதறிப்போயினர்.

மாமியாரின் இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பத்மநாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மஞ்சு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். மாமியார் தனது கதை துண்டாக்கியும், கல்லால் தாக்கியது குறித்தும் மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை மாமியார் கடித்து குதறிய சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.